'19' பேரையும் மிரட்சியுடன் பார்த்த புதுவை ரிசார்ட் ரிசப்ஷனிஸ்டுகள்.. எல்லாம் கூவத்தூர் பாடம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள விண்ட்பிளவர் ரிசார்ட்டில் வந்து தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களால் அந்த ரிசார்ட்டே ஒரு விதமான அசாதாரண சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் மீண்டும் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. முன்பு அதிமுக ஓபிஎஸ், அதிமுக சசிகலா என உடைந்தபோது இதுபோலத்தான் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் கொண்டு போய் தனது ஆதரவு எம்எல்ஏக்களை சசிகலா தங்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்போது அதே பாணியில் தினகரனும் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை புதுச்சேரிக்குக் கொண்டு போயுள்ளார்.

புதுச்சேரி ரிசார்ட்
தமிழகத்தில் எங்கு தங்கினாலும் பாதுகாப்பு கிடையாது என்பதால் இந்த முறை புதுச்சேரிக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டனர். இங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. எனவே இங்கு பிரச்சினை வராது என்பதால் இங்கு வந்துள்ளனர் போலும்.

எங்கும் பிரம்மாண்டம்
பூலோக சொர்க்கம் போல காணப்படுகிறது இவர்கள் தங்கியுள்ள விண்ட்பிளவர் ரிசார்ட். எங்கு பார்த்தாலும் பிரமாண்டம்தான். அதிமுக என்றாலே பிரம்மாண்டம் என்பதற்குப் பொருத்தமாக இந்த பிரமாண்ட ரிசார்ட்டும் காணப்படுகிறது. அப்படி ஒரு பிரமாண்டமாக காணப்படுகிறது இந்த ரிசார்ட்.

ரிசப்சனிஸ்ட்கள் மிரட்சி
இங்கு தங்க வந்த 19 எம்எல்ஏக்களின் பெயர் விவரங்களை ரிசப்ஷனில் உள்ளவர்கள் முறைப்படி பதிந்த பிறகுதான் உள்ளே அனுப்பியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் செம காமெடியாக இருக்கிறது.
அந்த ரிசப்ஷனில் உள்ளவர்கள் பெயர்களைப் பதிவு செய்தபோது முகமே இறுகிப் போய்க் காணப்பட்டது. ஒரு வித மிரட்சி அவர்களது முகத்தில் பரவிக் கிடந்தது தெரிய வருகிறது.

பீதியுடன் வரவேற்பு
ஒருவேளை கூவத்தூர் களேபரங்களை நினைத்தும், அதிமுகவின் அதகளத்தை நினைத்துப் பார்த்தும் இவர்கள் பீதியுடன் காணப்படுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் முகம் மலர இவர்கள் அதிமுக எம்எல்ஏக்களை வரவேற்றது போலவே தெரியவில்லை.

கூவத்தூர் கதை
பீதி இருக்கத்தானே செய்யும். கூவத்தூரில் கொஞ்ச நஞ்ச கூத்துக்களா நடந்தது. அதிமுகவினர் அனைவரும் வெளியேறிய பின்னர் ரிசார்ட்டையே தற்காலிகமாக மூடி விட்டு ஓனர் ஓடிய கதை இன்னும் கூட பேசப்படுகிறதே.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications