அதிமுக கட்சியை அழிக்க தினகரன் செய்யும் வேலையை பார்த்தீர்களா.. குமுறிய ஓபிஎஸ்
அதிமுகவுக்குள் பல வேற்றுமையை ஏற்படுத்தி கட்சியை தினகரன் அழிக்கப்பார்ப்பதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்
Recommended Video

சென்னை: அதிமுக கட்சிக்குள் சிண்டுமுடிந்து கபளீகரம் செய்து தினகரன் அழிக்கப்பார்ப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தினகரன் பற்றி எனக்கு நன்றாக தெரியும், பல ஆண்டுகளாக அவரின் குணம் எப்படி, செயல்பாடுகள் எப்படி அனைத்தும் எனக்கு தெரியும். அவர் நல்லவர் இல்லை. அதனால் தான் அவர் அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
மன்னார்குடி குடும்பத்தின் இரும்பு பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்லகூடாது என்பதற்காக இணைந்து செயலாற்றி கொண்டிருக்கிறோம். 234 தொகுதிகளிலும் மக்களும் அதிமுகவின் பக்கம் தான் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கூட்டங்களே அதனை எடுத்து கூறுவதாக அவர் தெரிவித்தார்.
எதையோ எதிர்பார்த்து சிலர் தினகரன் பக்கம் சென்றிருக்கின்றனர். அவர்களை நம்ப கட்சியினர் தயாராக இல்லை என்றும், வரம்பு மீறிய அதிகாரத்தால் கடந்த காலத்தில் அதிகாராத்தின் எல்லைக்கே சென்றவர்கள் மன்னார்குடி குடும்பத்தினர் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
மேலும் அதிமுகவுக்குள் சண்டுமுடித்து கபளீகரம் செய்து கட்சியை அழிக்க தினகரன் நினைப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், அதிமுக தூய தொண்டர்கள் இருக்கும் வரை அது நடக்காது என்றும் கூறினார்.
-
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications