தொப்பி அணிந்து பணப்பட்டுவாடா செய்தால் நாங்கள் பொறுப்பல்ல.. டிடிவி தினகரன் ஆவேசம்
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் எங்கள் அணியை சேர்ந்தவர் இல்லை என்று தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகரில் தொப்பி அணிந்து கொண்டு பணப்பட்டுவாடா செய்பவர்களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக, அதிமுக அம்மா கட்சி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி, தேமுதிக, சிபிஎம், பாஜக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலும் ஆட்டம், பாட்டம் என தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்திருப்பதால், சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் தங்களது பலத்தை நிரூபிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக அம்மா கட்சி வேட்பாளர். டி.டி.வி. தினகரன் எப்படியாவது வெற்றி பெற்று முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக 30 அமைச்சர்கள், 30 எம்பிக்கள், 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று மாலை தலையில் தொப்பி அணிந்து கொண்டு ஆர்.கே.நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த கருணாமூர்த்தி என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் தினகரன். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் எங்கள் அணியை சேர்ந்தவர் இல்லை. இது திமுகவின் சதித்திட்டமாக ஏன் இருக்கக் கூடாது. தலையில் தொப்பி அணிந்து கொண்டு பணப்பட்டுவாடா செய்தால் நாங்கள் தான் பணம் அளிக்கிறோம் என்று அர்த்தமில்லை என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications