ஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு ஆர்கே நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் டிசம்பர் 24ஆம் தேதி வெளியானது.

தினகரன் வெற்றி
இதில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

பணப்பட்டுவாடா
தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு சுயேச்சை வேட்பாளர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பணப்பட்டுவாடா செய்ததால் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரியிருந்தார் ரவி.

தினகரன் வெற்றி செல்லும்
இந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.

வழக்கு தள்ளுபடி
மேலும் டி.டி.வி தினகரன் மீதான வழக்குகள் ஆதாரம் இல்லை என்று கூறிய நீதிபதி சுயேச்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications