பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி ஆறுதல்!
பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி அனுராதா ஆறுதல் கூறினார்.
Recommended Video

சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த கார் ஓட்டுநர் பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி அனுராதா மற்றும் மகள் ஆறுதல் கூறினர்.
சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார் டிடிவி தினகரன்.
இந்நிலையில், அடையாறில் இருக்கும் டிடிவி தினகரனின் வீட்டில் மர்ம நபர்கள் இன்று பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் தினகரனின் ஓட்டுநர் பாண்டித்துரை, புகைப்பட கலைஞர் டார்வின், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் என 3 பேர் காயமடைந்துள்ளனர்.

சிகிச்சை
இதனையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினகரன் மனைவி ஆறுதல்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் முன்பாக ஓட்டுநர் பாண்டித்துறைக்கு தினகரன் மனைவி அனுராதா மற்றும் அவரது மகள் ஜெயஹர்ஷினி ஆகியோர் ஆறுதல் கூறினர்.

கண்ணாடிகள் உடைந்து சேதம்
இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் தினகரன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைந்து பலத்த சேதமடைந்தது.

புல்லட் பரிமளம் நீக்கம்
கடந்த வாரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் நகர செயலாளர் பதவியில் இருந்து புல்லட் பரிமளம் என்பவரை நீக்கிவிட்டு உமா மகேஸ்வரி என்பவரை அந்த பதவியில் தினகரன் நியமித்துள்ளார்.

பரிமளம் தரப்பு தாக்குதல்
இதனையடுத்து தினகரனை சந்தித்து நன்றி தெரிவிக்க இன்று உமா மகேஸ்வரி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக உமா மகேஸ்வரி மீது பரிமளம் தரப்பினர் தாக்குதல் நடத்த பெட்ரோல் குண்டுகளுடன் காரில் வந்துள்ளனர்.

பரிமளம் டிரைவர் கைது
இதில் எதிர்பாராத விதமாக புல்லட் பரிமளத்தின் காரில் இருந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து பரிமளத்தின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

துணை ஆணையர் ஆய்வு
மேலும் புல்லட் பரிமளத்தை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தினகரன் வீட்டில் அடையாறு துணை ஆணையர் ஷசாங்சாய் நேரில் ஆய்வு செய்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications