அங்கே எட்டப்பர்கள் அதிகம் இருக்கிறார்கள்... நாங்களே உண்மையான அதிமுக - தினகரன்
கட்சியும், தொண்டர்களும் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் வசம் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video

திருப்பூர்: இரட்டை இலை தீர்ப்பின் பின்னணியில் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் எட்டப்பன் நாட்டை காட்டிக்கொடுத்தார். அதேபோல சில எட்டப்பன்கள் அங்கு இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
ஜெயலலிதாவின் வாக்கு வங்கி எப்போதும் எங்களுக்கே கிடைக்கும் என்று தினகரன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிடிவி தினகரன், பாஜகவின் சதிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உடந்தையாக இருக்கிறார்கள் என்றார்.

ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை
கட்சியை காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது, ஆனால் ஆட்சியாளர்களுக்கு கட்சி குறித்து கவலையில்லை. சசிகலா தலைமையில் கட்சி இயங்கினால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும்.

தேர்தல் ஆணையம் நடுநிலையில்லை
122 எம்எல்ஏக்கள் இருந்த போது எங்களுக்கு சின்னம் தரவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது சின்னத்தை முடக்கினர். நேற்று சின்னத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு இன்று தேர்தலை அறிவிக்கின்றனர். இடைத்தேர்தலின்போது சின்னத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?.

இறுதிச்சுற்று
முதல் சுற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், இறுதி சுற்றில் வெற்றி எங்களுக்கே கிடைக்கும். ஏனெனில் கட்சித் தொண்டர்கள் பன்னீர்செல்வம் மீதும் எடப்பாடி பழனிசாமி மீதும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஆட்சி கலையும்
கட்சியும் தொண்டர்களும் அவர்களிடம் கிடையாது. எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க பொதுமக்கள் விரும்புவதாகவும், மக்கள் விரோத எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தினகரன் கூறியுள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications