எடப்பாடிக்கு போன் போட்ட மோடி... தினகரனின் அத்தனை ப்ளானும் பனால்- அலறும் சசி கோஷ்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து பாஜகவுடன் கண்ணாமூச்சி ஆட்டம் போட நினைத்த தினகரனின் வியூகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டதால் கொங்கு கோஷ்டி உற்சாகத்தில் இருக்கிறது.

அதிமுகவை கைப்பற்றும் சசிகலா குடும்பத்தின் முயற்சிக்கு முழு அளவில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது டெல்லி. சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் தினகரன் அதிமுகவில் தலையெடுத்ததை டெல்லி விரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரனை டெல்லி போலீஸ் கைது செய்து சிறையிலடைத்தது. ஜாமீனில் வெளியே வந்துள்ள தினகரன் டெல்லியுடன் மோதுவதற்காக 34 எம்.எல்.ஏக்களை வளைத்து வைத்தார்.

பாஜக தேடி வரும்

பாஜக தேடி வரும்

இப்படி எம்.எல்.ஏ.க்களை வளைத்து வைத்தால் ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து தம்மிடம் ஆதரவு கேட்டு பாஜக வரும்; அப்போது நாம் பல விஷயங்களை சாதிக்கலாம் என்பது தினகரன் தரப்பின் வியூகம். இதற்காகவே நாள்தோறும் எம்.எல்.ஏக்கள் வந்து தம்மை சந்திக்க வைக்கும் நாடகத்தையும் தினகரன் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

பாஜக வேட்பாளர் அறிவிப்பு

பாஜக வேட்பாளர் அறிவிப்பு

இந்நிலையில் பாஜக நேற்று ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை அறிவித்த கையோடு மாநிலங்களின் முதல்வர்களுக்கு போன் போட்டு கட்சிகளின் ஆதரவையும் கேட்டார் பிரதமர் மோடி.

எடப்பாடிக்கு போன்

எடப்பாடிக்கு போன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் போன் போட்டு அதிமுகவின் ஆதரவைக் கேட்டார் பிரதமர் மோடி. ஆனால் 34 எம்.எல்.ஏக்களை வைத்திருப்பதாக சொல்லும் தினகரனை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லை.

அதிர்ச்சியில் சசி குடும்பம்

அதிர்ச்சியில் சசி குடும்பம்

இதனால் சசிகலா குடும்பமே ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போய் கிடக்கிறது. அதேநேரத்தில் தினகரன் போட்டுவைத்த வியூகம் பணால் ஆகிப் போனதால் கொங்கு கோஷ்டி படு உற்சாகத்தில் இருக்கிறது.

உச்சகட்ட கும்மாளத்தில் கொங்கு டீம்

உச்சகட்ட கும்மாளத்தில் கொங்கு டீம்

இப்போது பிரதமர் மோடி தங்களையே அங்கீகரித்திருக்கிறார்... சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை செல்லாது என தேர்தல் ஆணையம் மட்டும் அறிவித்துவிட்டால் போதும்... கட்சியும் தங்களது கட்டுப்பாட்டில் வந்துவிடும் என உச்சகட்ட கும்மாளத்தில் இருக்கிறது கொங்கு கோஷ்டி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran was shocked over the Delhi's strong support to Team Edappadi Palanisamy.
Please Wait while comments are loading...