For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரன் அணியினர் 25 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குக்கு எதிர்ப்பு- குடவாசலில் கடையடைப்பு

தினகரன் அணியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடவாசலில் இன்று கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

திருவாரூர் : அதிமுகவின் புதிய செயலாளரை தினகரன் நியமித்ததில் ஏற்பட்ட தகராறில் தினகரன் அணியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி குடவாசலில் கடையடைப்பு நடைபெற்ற வருகிறது.

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான காமராஜை கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக டிடிவி. தினகரன் கடந்த 23ம் தேதி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அதிமுக நகர செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் தினகரன் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

 Dinakaran supporters conducting shops shut at Kudavasal

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அதிமுக நகர அலுவலகம் சூறையாடப்பட்டது. இது குறித்து சுவாமிநாதன் குடவலாசல் காவல்தறையிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் தற்போது அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் உள்பட 25 பேர் மீது ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு போடப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து தினரன் அணியினர் இன்று குடவாசலில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று மாலை முதல் இந்த கடையடைப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Dinakaran supporters agitating at Kudavasal by shutting down shops to convey their condemn for case filed against them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X