சசிகலா குடும்பத்தில் ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் குழப்பம்: தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்
சசிகலா குடும்பத்தில் ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் குழப்பம் ஏற்படுகிறது என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.
சென்னை: சசிகலா குடும்பத்தில் ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சாடியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வீடியோ எடுக்கப்பட்டது என பரபரப்பை கிளப்பினார் திவாகரன் மகன் ஜெயானந்த். இந்த வீடியோக்களில் ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு அதிர வைத்தார்.

கிருஷ்ணப்பிரியா
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதற்காக தினகரன், வெற்றிவேலை இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா விமர்சித்தார். இதனால் கிருஷ்ணப்பிரியாவை கன்னத்தில் அறைவேன் என சசிகலா கணவர் நடராஜன் கூறினார்.

திவாகரன் திடுக்
நடராஜன் என்னை அறைந்து பார்க்கட்டும் என சவால்விட்டார் கிருஷ்ணப்பிரியா. இந்த நிலையில் ஜெயலலிதா டிசம்பர் 4-ந்தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிர வைத்தார்.

தினகரன் தரப்பு எதிர்ப்பு
பின்னர் தமது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும் திவாகரன் விளக்கம் கொடுத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், சசிகலா குடும்பத்தில் ஆள் ஆளுக்கு பேட்டி கொடுப்பதால் குழப்பம் ஏற்படுகிறது.

தினகரனுக்கு இடையூறு
சசிகலாவால் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரன் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இதனை குழப்பும் விதமாக கருத்துகளை தெரிவிக்கக் கூடாது; திவாகரனின் பேச்சு தேவையில்லாத ஒன்று என சாடியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications