ஜெயலலிதா சமாதியில் டிக்கிலோனா விளையாடிய தினகரன் குரூப்!
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தினகரன் குரூப் விழுந்து வாரி எழுந்தது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தினகரன் குரூபினர் ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டும் இடித்துக்கொண்டும் விழுந்து வாரி எழுந்தனர். தடுமாறி ஜெயலலிதாவின் சமாதியின் மீது ஏறிய தினகரனை கலைராஜன் அலேக்காக தாங்கிப்பிடித்தார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவித்தது அப்பல்லோ மருத்துவமனை. இது தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவரது முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் படத்திற்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

துக்க நாளாக கடைபிடிப்பு
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திலும் அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா மறைந்த நாளான இன்று அதிமுக சார்பில் துக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது.

அதிமுக அமைதி ஊர்வலம்
ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து துக்க நாளாக கடைபிடித்தனர். மேலும் அவர்கள் சென்னை அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் நடத்தினர்.

அடுத்து தினகரன் குரூப்
பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர்கள் கழகத்தை காப்போம் என உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து தினகரன் தலைமையில் கலைராஜன், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தனர்.

ஜெ.சமாதி மீது உட்கார்ந்தனர்
அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டும் முந்திக்கொண்டும் அலப்பறை செய்தனர். தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் ஜெயலலிதாவின் சமாதி மீதே உட்கார்ந்துவிட்டனர்.

ஜெ. சமாதியில் ஏறிய தினகரன்
கூட்டத்தினர் தள்ளவே பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறினார் டிடிவி தினகரன். ஒருக்கட்டத்தில் ஜெயலலிதாவின் சமாதியின் மீது காலை வைத்து ஏறினார் தினகரன்.

டிக்கிலோனா விளையாட்டு
அவரை அப்படியே அலேக்காக தாங்கிப்பிடித்தார் கலைராஜன். ஜெயலலிதா சமாதியில் தினகரன் குரூப் இன்று நடத்திய கூத்து நடிகர் செந்திலின் டிக்கிலோனா விளையாட்டையே நியாபகப்படுத்தியது..
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications