கிராபிக்ஸ் செய்து வீடியோ வெளியிடுவார்கள்.. தினகரன் குறித்து கேபி முனுசாமி அதிரடி!
கடந்த காலத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தினகரனை சந்தித்த வீடியோக்களை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கடந்த காலத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தினகரனை சந்தித்த வீடியோக்களை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தினகரன் தெரிவித்திருந்தார்.
தினகரனின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது. அவரது பேச்சுக்கு அதிமுகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தினகரன் பேச்சு குறித்து முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கூறியிருப்பதாவது,

அரசியல் வாழ்வு
இரண்டு தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விடும் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இரண்டு தொகுதிகளும் நாங்கள் வெற்றி பெற்று விட்டால் அரசியல் வாழ்வு இனி தனக்கு இருக்காது என தினகரன் முடிவு செய்திருக்கிறார்.

நம்ப மாட்டார்கள்
அந்த முடிவின் வெளிப்பாடுதான் கட்சித் தொண்டர்களை குழப்ப வேண்டும் என இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார். நிச்சயமாக இந்த கருத்தை அதிமுக தொண்டர்கள் நம்ப மாட்டார்கள். செவி சாய்க்கமாட்டார்கள்.

தீய சக்தி
எம்ஜிஆர் அவர்கள் கருணாநிதியைப் பார்த்து தீய சக்தி என கூறினார். அந்த கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு இன்றுவரை அவரை தீய சக்தியாகவே பார்க்கின்றனர்.

சேர்க்க மாட்டோம்
அதேபோல் இந்த இரண்டாவது கட்ட போராட்டத்தில் எங்களுக்கு தீயசக்தியாக சசிகலாவும் தினகரனும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம்.

கடந்த கால வீடியோ
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தற்பொழுது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள். இவ்வாறு முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி தெரிவித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications