தெறிக்க விடும் ”படி” வான்கோழி பிரியாணியும் அடேங்கப்பா ”ஆஃபர்களும்.”... இது திண்டுக்கல் தீபாவளி!

திண்டுக்கல்லில் தீபாவளியை முன்னிட்டு களைகட்டியிருக்கிறது வான்கோழி பிரியாணியும் ஆஃபர்களும்.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பிரியாணி பூமியான திண்டுக்கல் தீபாவாளியை மற்ற நகரங்களை விட வித்தியாசமான ஆஃபர்களுடன் கொண்டாடி வருகிறது.

ஆம்பூர், வாணியம்பாடி பிரியாணி சுவை ஒரு ரகம் என்றால் திண்டுக்கல் சீரகசம்பா பிரியாணி சுவை அலாதியானது. அதுவும் திண்டுக்கல் பிரியாணியும் தால்சா எனப்படும் எலும்பு குழம்பும் அடடே ரகம்தான்.

தலப்பாகட்டி, பொன்ராம், வேணு என புகழ்பெற்ற ஹோட்டல்கள் இருந்தாலும் சிறியதும் பெரியதுமான கடைகள் நம்மை வாலண்டியராக அள்ளிப் போக வைத்துவிடும் சுவையும் மனமும் கொண்டது திண்டுக்கல் பிரியாணி. இந்த நகருக்குள் வரும் வெளியூர்வாசிகள் திண்டுக்கல் பிரியாணியை சுவைக்காமல் செல்வது இல்லை.

விடிய விடிய கூட்டம்

விடிய விடிய கூட்டம்

கட்சி பொதுக்கூட்டம், மாநாடு போன்றவை நடந்தால் பொதுவாக டாஸ்மாக் கடைகளில்தான் கூட்டம் மொய்க்கும். இங்கே முதல் நாள் இரவு முதல் மறுநாள் வரை பிரியாணி ஹோட்டல்களில்தான் கூட்டம் அள்ளும்.

திண்டுக்கல்லில் படி பிரியாணி

திண்டுக்கல்லில் படி பிரியாணி

பொதுவாக பிரியாணி கால் பிளேட், அரை பிளேட், புல் பிளேட் என்றுதான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பிரியாணி நகரமான திண்டுக்கல்லில் படிக்கணக்கில் பிரியாணியும் கிடைக்கும்.

பிரியாணிக்கு ஆஃபர்கள்

பிரியாணிக்கு ஆஃபர்கள்

1 படி பிரியாணி வாங்கினால் பெரியவர்கள் எனில் குறைந்தது 10 முதல் 12 பேர் வரை தாரளமாக சாப்பிட முடியும். பொதுவாகவே படி பிரியாணி வாங்கினால் அடேங்கப்பா ஆஃபர்களும் தருவார்கள்.

தீபாவளி ஆஃபர்கள்

தீபாவளி ஆஃபர்கள்

இப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போட்டி போட்டிக் கொண்டு படி பிரியாணிக்கான ஆஃபர்களை அறிவித்திருக்கிறது திண்டுக்கல் பிரியாணி ஹோட்டல்கள். அதுவும் திண்டுக்கல் பிரியாணி ஹோட்டல்களில் தீபாவளி ஸ்பெஷல் ‘வான்கோழி பிரியாணிதான்.

திண்டுக்கல் தலப்பாகட்டி

திண்டுக்கல் தலப்பாகட்டி

திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலில் 1 படி பிரியாணி வாங்கினால் அரை லிட்டர் கோக், 6 சிக்கன் பீஸ் பிரை என எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரப்படுத்துகிறார்கள்.

பிரியாணி விலை குறைப்பு

பிரியாணி விலை குறைப்பு

வேணு ஹோட்டலில் பிரியாணி 1 படி மட்டன் பிரியாணி வழக்கமாக ரூ2,400 என விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்காக ரூ2,200 என ‘ஆஃபர்' கொடுக்கிறார்களாம்.

பொன்ராமில் வான்கோழி

பொன்ராமில் வான்கோழி

பொன்ராம் ஹோட்டலில் 1 படி பிரியாணிக்கு நோ ‘ஆஃபர்'. ஆனால் தீபாவளி ஸ்பெஷலாக வான்கோழி பிரியாணி கிடைக்குமாம். 1 படி வான்கோழி பிரியாணி ரூ3,000.

1கிலோ சிக்கன் 65 இலவசம்

1கிலோ சிக்கன் 65 இலவசம்

ஆச்சீஸ் ஹோட்டலில் வான்கோழி பிரியாணி 1 படி வாங்கினால் 10% டிஸ்கவுண்ட்டாம். இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறது கோல்ட் ஸ்டார் பிரியாணி. 1 படி பிரியாணி வாங்கினால் 1 கிலோ செட்டிநாடு சிக்கன் கிரேவி; 1 கிலோ சிக்கன் 65 ப்ரீயாம். அரை படி வாங்கினால் அரை கிலோ சிக்கன் கிரேவி, சிக்கன் 65 ப்ரீயாக தருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+