20ம் 18ம் சேர்ந்தால் 38.. இது கூட்டல் கணக்கு... 18ஐ 20 அழைத்துச் சென்றால் காதல் கணக்கு...!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ லியோனி, திமுக தலைவர் கருணாநிதி முன்பு பேசிய பேச்சு ஒன்றைக் குறிப்பிட்டு கலகலப்பை ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்விக் குழுமத்தின் சார்பில் நடந்த விழாவில்தான் இப்படி நகைச்சுவையாகப் பேசினார் லியோனி.

மாணவ, மாணவியர் மத்தியில் லியோனி பேசிய பேச்சிலிருந்து சில பகுதிகள்...

நம்மால் முடியும்...

நம்மால் முடியும்...

உங்கள் ஒவ்வொருவரிடமும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கையில்லையென்றால் எதுவும் முடியாது.

கணக்குத்துறை விழாவுக்குப் போன கருணாநிதி

கணக்குத்துறை விழாவுக்குப் போன கருணாநிதி

தமிழ் அறிஞரான திமுக தலைவர் கருணாநிதியை கணக்குதுறை தொடக்க விழாவுக்கு அழைத்தார்கள். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு சென்றார்.

அது கூட்டல்.. இது காதல்...

அது கூட்டல்.. இது காதல்...

20ம் 18ம் சேர்ந்தால் 38. இது கூட்டல் கணக்கு, 18ஐ 20 அழைத்து சென்றால் அது காதல் கணக்கு என ஐந்து வரிகளில் பேசிவிட்டு நன்றி சொல்லி சென்றார். இதுதான் நம்பிக்கை.

என்னையே எடுத்துக்கங்களேன்...

என்னையே எடுத்துக்கங்களேன்...

என்னை எடுத்துக்கொள்ளுங்கள். முதன் முதலில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் கலந்துக்கொள்ள சென்றேன். பயத்தில் பேச முடியாமல் தோல்வியில் திரும்பி வந்தேன். என் தாய் என்னை திட்டவில்லை உன்னால் முடியாது எனச்சொல்லவில்லை. உன்னால் முடியும் என நம்பவைத்தார்.

பாப்பையா முன்பு கூனிக் குறுகி நின்றேன்

பாப்பையா முன்பு கூனிக் குறுகி நின்றேன்

அதேபோல், சாலமன் பாப்பையா தலைமையிலான முதல் பட்டிமன்றத்தில் சரியாக பேசாமல் அவமானத்தில் கூனி குருகி போனேன். அங்கு ஒரு பாதிரியார் தான் முயற்சி செய்யுங்கள் என என் முதுகில் தட்டி தந்தார். அந்த ஒரு தட்டல் தான் என்னை பல்லாயிரம் கைதட்டல்களுக்கு உடையவனாக்கியது.

அசிங்கப்பட்டு முடங்கியிருந்தால்...

அசிங்கப்பட்டு முடங்கியிருந்தால்...

அன்று நான் அவமானத்தில், அசிங்கப்பட்டு முடங்கியிருந்தால் இன்று தோற்றுப்போயிருப்பேன்.

நாமதான் தள்ளி ஓட்ட வேண்டும்

நாமதான் தள்ளி ஓட்ட வேண்டும்

சைக்கிள் ஒட்டுவது பற்றி புத்தகம் வழியாகவோ, நீச்சல் பயிற்சி மற்றவர்கள் சொல்லி தருவதாலோ நிச்சயம் முழுமை பெறாது. நாம் தான் சைக்கிள் தள்ளி ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும், தைரியமாக நீரில் இறங்கி பயில வேண்டும்.

பதட்டப்படாதீங்க...

பதட்டப்படாதீங்க...

பதட்டமாக எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதட்டப்படாமல் உற்று நோக்குதல், கவனித்தல் இருக்க வேண்டும் அப்போது தான் ஒருவரால் வெற்றி பெற முடியும் என்றார் லியோனி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+