விடைத்தாள் மோசடி: திண்டிவனம் அண்ணா பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் சஸ்பென்ட்.. சூரப்பா அதிரடி!
திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

திண்டிவனம்: அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் பெறபட்டுள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2017ல் மோசடி
ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். 2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

உமா தலைமையில் மோசடி
அண்ணா பல்கலைக்கழக்த்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கல்லூரி முதல்வர் நீக்கம்
இதையடுத்து தற்போது போராசிரியையாக பணிபுரிந்து வரும் உமா இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலை. நடவடிக்கை
விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைக்கேடு புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைக்கேடு விவகாரத்தில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications