சென்னையில் கிறிஸ்தவ முறைப்படி மணம் புரிந்த தினேஷ் கார்த்திக் - தீபிகா; நாளை இந்து முறைப்படி!
சென்னை: விளையாட்டு உலகின் ஜோடியான தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இன்று நடந்த திருமணம் தீபிகாவின் மதமான கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் நடத்தப்பட்டது.
நாளை தினேஷ் கார்த்திக் மதப்படி இந்து முறைப்படி இன்னொரு திருமணம் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் தினேஷ்-ஸ்குவாஷ் தீபிகா:
இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், சென்னையில் வசிக்கும் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்தனர்.

காதல் திருமணம்:
இதைத் தொடர்ந்து திருமண நிச்சயமும் செய்து கொண்டனர். எனினும், அவரவர் விளையாட்டுகளில் பணிச்சுமை நெருக்கியதால் அதில் மும்முரமாகினர்.

கிறிஸ்தவ முறைப்படி நேற்று:
இந்த நிலையில் ஒருவழியாக தினேஷ் கார்த்திக்-தீபிகா பல்லிக்கல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி சென்னையில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.

நாளை இந்து முறைப்படி:
அவர்களுடைய திருமணம் நாளை இந்து முறைப்படியும் நடக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பர் தினேஷ்:
கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விக்கெட் கீப்பரும் ஆவார். 2004இலிருந்து இந்தியாவுக்காக விளையாடுகிறார்.

ஸ்குவாஷ் ராணி தீபிகா:
தீபிகா பல்லிக்கல் என்று அறியப்படும் தீபிகா ரெபக்கா பல்லிக்கல் 21 செப்டம்பர் 1991 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சிரியன் கிறித்தவ பெற்றோருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள இவர்கள் கடந்த நவம்பர் 15, 2013 ஆம் ஆண்டு திருமண நிச்சயம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications