ஆபாச படம் எடுத்த தினேஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்கள்... போலீஸார் அதிர்ச்சி
ஆபாச படம் எடுத்த தினேஷ்குமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்களை தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: பெண்களை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய தினேஷ்குமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியானது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கணினி பொறியாளராக உள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தனது உறவுக்கார பெண் ஒருவரது வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ்குமார்.
அங்கு அந்த பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட முக்கிய செயலிகளை டவுன்லோடு செய்யும் சாக்கில் டிராக்வியூ செயலியையும் தினேஷ்குமார் டவுன்லோடு செய்துள்ளார்.

வெளிநாட்டில் வாழும் கணவன்
அதை தன்னுடைய மொபைல் எண்ணுடன் சின்க் செய்துள்ளார். இதன் மூலம் அந்த பெண் அனுப்பும் படங்கள், வீடியோ மற்றும் பேச்சு ஆகியவை தினேஷின் மொபைல் போனிலும் வந்துள்ளது. இதில் அந்த பெண் தன்னுடைய அந்தரங்க வீடியோவை வெளிநாட்டில் வாழும் கணவனுக்கு அனுப்பியுள்ளார்.

போலீஸில் ஒப்படைப்பு
இதை வைத்து கொண்டு ஆசைக்கு இணங்காவிட்டால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று தினேஷ்குமார் மிரட்டி கையும் களவுமாக சிக்கியுள்ளார். இதையடுத்து அவரை அந்த பெண்ணும் சகோதரனும் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வீடியோக்கள் திருட்டு
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் கணினி டெக்னீசியனாக பணிபுரிந்துள்ளார் தினேஷ்குமார். அப்போது அந்த கல்லூரியில் படித்த மாணவியின் செல்போனை திருடி அதிலிருந்த வீடியோக்களையும் திருடி மிரட்டியுள்ளார்.

உறவுக்காரராக இருந்தாலும்
அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததால் தினேஷ்குமாரை அடித்து விரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து தான் சந்திக்கும் உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என பெண்களின் போனை வாங்கி பார்ப்பது போல் அதில் டிராக்வியூவை டவுன்லோடு செய்துவிட்டு தனது போனுடன் சின்ங்க் செய்துகொள்வார்.

பறிமுதல்
அந்தரங்க காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆணைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். அவ்வாறு இணங்கும் பெண்களின் ஆடைகளை தன் வீட்டிலேயே சேகரித்து வைத்திருந்துள்ளார். இவற்றைதான் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீஸ் அதிர்ச்சி
ஆசைக்கு இணங்காத பெண்களின் வீடியோவை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு பல லட்சங்களுக்கு விற்று விட்டதும் தெரியவந்தது. அவரது லேப்டாப்பை போலீஸார் சோதனையிட்டதில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க காட்சிகளையும் 140 பெண்களின் அந்தரங்க உரையாடல்களையும் கண்ட காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications