மதிமுகவிலிருந்து விலகி டைம் விட்டு அதிமுகவுக்கு தாவிய இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்
சென்னை: நடிகரும் இயக்குநருமான சுந்தர்ராஜன் இன்று ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ம.தி.மு.க.வில் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்தவர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன், கடந்த 2011ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் வைகோவுக்கு எழுதிய கடிதத்தில், அரசியலில் நேர்மை பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, என்ற உயர்வான உங்கள் முழக்கங்கள் எனக்குப் பிடித்ததால், எந்த ஒரு இயக்கத்தையும் சாராமல் இருந்த நான் ம.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தேன்.

ம.தி.மு.க. ஆரம்பித்த போது மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். ஆனா என்னோட முதல் தலைவனா உங்களை ஏத்துக்கிட்டு கன்னிப் பொண்ணா வந்தவன் நான். வெற்றியோ, தோல்வியோ, இயக்கமும், தலைவனும்தான் முக்கியம் என்று இத்தனை காலமும் வலிகளையும், வேதனைகளையும் தாங்கி, தாங்கி தழும்பேறி போனநான் வெளியே போறது தான் நல்லதுன்னு நீங்க நெனைக்கிறீங்க.
உங்களுக்கு நல்லதே பண்ண வேண்டும் என்று நினைக்கிற நான், உங்க நினைப்புப்படியே இப்ப கட்சியோட அரசியல் ஆய்வு மையக்குழுவில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விலகுகிறேன் என்று கூறினார்.
அரசியலில் இருந்தும் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சுந்தர்ராஜன் இன்று போயஸ்கார்டன் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.
பயணங்கள் முடிவதில்லை, மெல்லத்திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தாள்,ராஜாதிராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆர். சுந்தர்ராஜன். பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
விஜயகாந்தை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மகனின் மரணம் அவரை முற்றிலும் மாற்றி விட்டது. 2011ம் ஆண்டு முதல் அரசியல், சினிமா என அனைத்திலும் ஒதுங்கியிருந்த சுந்தர்ராஜன் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தல் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுந்தர்ராஜன் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications