விஷால்,கார்த்தி முதல்ல நடிங்க… அப்புறம் தலைவன் இடத்தை பிடிங்க: சொல்வது சேரன்
சென்னை: மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று கூறும் விஷால், கார்த்தி ஆகியோர் முதலில் நடிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தலைவன் என்கிற இடத்தை பிடிக்கலாம் என்று கூறியுள்ளார் இயக்குநரும் நடிகருமான சேரன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. சென்னையில் விஷால் - சரத்குமார் அணிகள் தனித்தனியே ஆதரவாளர்கள் கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தனர்.

நேற்று சரத்குமார் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அனைவரும் விஷால் அணியினரை வெளுத்து வாங்கினர். இயக்குநரும், நடிகருமான சேரன், பேசிய போது, விஷால், கார்த்தியை திட்டி தீர்த்தார்.
கூட்டத்தில் பேசிய சேரன், விஷால் தம்பி, கார்த்தி தம்பி நீங்க ரொம்ப துடிப்போட இருக்கீங்க... நடிகர் சங்க பிரச்சினை எல்லாம் உங்களுக்குத் தேவையில்லை. முதல்ல நல்லா நடிங்க அப்புறம் தலைவர் பதவியை பிடிங்க என்றார்.
நீங்க நடிக்கிற படத்தோட கதையையே சரியா செலக்ட் பண்ண முடியலை அது பிளாப் ஆயிருது... இதுல எப்படி நடிகர் சங்கத்துக்கு தலைவர், செயலாளர் ஆகி மத்தவங்க பிரச்சினையை தீர்க்கப் போறீங்க?
நடிகர் சங்கத்திற்கு இப்போது அக்கறை உள்ளவர்களைத் தாண்டி அனுபவம் உள்ளவர்கள் வேண்டும். இப்போது தலைவர் பதவியை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சரத்குமார் ஜெயித்த உடன் வாங்க, வந்து சரத்குமார் கூட அலைங்க தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர்கள், ஒரு நடிகர் சங்க உறுப்பினர்கள் பிரச்சினை எப்படி சரத்குமார் தீர்க்கிறார் என்பதை பாருங்க அப்புறம் தலைவராக ஆசைப்படுங்க.
அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் அப்புறம் உங்களை பதவி தேடி வரும். விஷால் நல்லா நடிக்கிறார். அவங்க கிட்ட நடிப்பு இருக்கு. இந்த நடிப்பை நம்பி ஏமாற மாட்டோம். தமிழ்நாட்டுக்கு வந்தீங்களா, நடிச்சீங்களா, சம்பாரிச்சீங்களா போய்கிட்டே இருங்க... ஏதாவது ஒரு போர்வைய போர்த்திட்டு தமிழனை இளிச்சவாயனாக்க நினைக்க வேண்டாம் என்று பேசியுள்ளார் சேரன்.












Click it and Unblock the Notifications