இயக்குநர் கே.பாலச்சந்தர் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை
சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடுள்ளார். அவரது உடல் நிலை மேம்பட்டுள்ளதாக பாலச்சந்தர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
பழம்பெரும் இயக்குநரான கே.பாலச்சந்தர், இயக்குநர் சிகரம் என்று புகழப்படுபவர். தமிழ் திரையுலகில் ஜாம்புவான்களாக விளங்கும், ‘கமல்ஹாசன்' மற்றும் ‘ரஜினிகாந்த்' எனப் பல முன்னணி நடிகர், நடிகைகளைத் திரையுலகிற்கு தந்தவர் பாலச்சந்தர். சமீபகாலமாக படம் இயக்காமல் ஓய்வில் இருந்து வந்த பாலச்சந்தருக்கு இன்று பிற்கபல் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மைலாப்பூரிலுள்ள காவேரி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாலச்சந்தர் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவேரி ஆஸ்பத்திரியின் மூத்த டாக்டரான வெங்கடாசலம் கூறியுள்ளதாவது: 84 வயதான பாலச்சந்தர் வயோதிகம் சார்ந்த பிரச்சினைகளாலும், காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போதைய நிலையில் அவரது உடல் நலம் சிறப்பாக உள்ளது. தேவைப்படும் சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வெங்கடாசலம் தெரிவித்தார். இந்த தகவலை காவேரி மருத்துவமனை பத்திரிகை செய்தியாகவும் அனுப்பியுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications