விஷால், கார்த்தியை விமர்சனம் செய்ய உங்களுக்கு தகுதியுள்ளதா? சேரனை விளாசும் இயக்குநர் தாமிரா!
சென்னை: நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் தன்னிடம் கதை கேட்டும் பதில் சொல்லாமல் இருந்ததாகவும், கதை கேட்க மறுத்ததாகவும் இயக்குநரும், நடிகருமான, சேரன் குற்றம்சாட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் தாமிரா, சேரனை குற்றம்சாட்டியுள்ளார். நீங்களும் கதை கேட்டுவிட்டு நழுவிய நபர்தான் என்று அந்த குற்றச்சாட்டில் தாமிரா ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு சாடியுள்ளார்.
இயக்குநர் கே.பாலசந்தர் மற்றும் பாரதிராஜாவை ஒன்றிணைத்து 'ரெட்டச்சுழி' என்னும் படத்தை இயக்கியவர் இயக்குநர் தாமிரா. மெஹர் இவரது கைவண்ணத்தில் வெளியாகி திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

பேஸ்புக்கில் விமர்சனம்
அவர் தனது பேஸ்புக்கில் சேரன் பற்றி விமர்சனம் செய்து கூறியுள்ளதாவது: /எந்த மனிதனாக இருந்தாலும் அவனை மதித்து, அவனை சந்தித்து அவன் மனம் நோகாமல் பதிலளித்தால் தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் கூட எழுந்து நடக்கத்துணிவார்கள் என்ற நல்ல சிந்தனை உங்களுள் வராமல் போனதே உங்கள் சமூகப்பணி தொடர்பாக என் மனதில் எழுந்த முதல் கேள்வி.

சேரன் கூறியதை வாசித்து
இப்படியிருக்க, மூத்த கலைஞர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது எந்த வகையில்!! என எனக்கு புரியவில்லை. அவர்களின் மன உணர்வுகளைப் பற்றி புரியாமல் நீங்கள் எப்படி உதவுவீர்கள் என்பது எனது அடுத்த கேள்வி. -சேரன் (இவ்வாறு சேரன் தனது அறிக்கையில் விஷால் மற்றும் கார்த்தியை குற்றம்சாட்டியுள்ளார்).
நடிக்க வந்தீர்களே
"சொல்ல மறந்த கதை'' படம் முடிந்த போது சேரன் ''தாமிரா, உங்களைப் போன்ற படைப்பாளிகளுக்கு எளிமையாகக் கிடைக்கக் கூடிய நாயகனாக இருக்க வேண்டும்.அதற்காகத்தான் நான் நடிக்க வந்திருக்கிறேன்'' என்றார். அவர் தேதி கொடுத்தால் தயாரிக்க ஒரு தயாரிப்பாளரும் இருந்தார்.

நழுவி விட்டார்
கலவர பூமியில் மாட்டிக்கொண்ட ஒரு மனைவியைத் தேடி கட்டுக்காவல்களை மீறி அவளை சந்திக்கத் துடிக்கும் ஒரு கணவனின் கதை. இன்றளவிலும் அது ஒரு நல்ல திரைக்கதை... அதன்பின் நான் அந்தக் கதையை வேறுமுயற்சி செய்யாமல் போகக் காரணம்.. அது மதக்கலவரம் சார்ந்த கதை.

பிற நடிகர்களும் அப்படித்தான்
தென் தமிழ்நாட்டில் அப்படியானக் கலவரங்கள் அடங்கிய பின் ஒரு திரைப்படமாக அதை எடுத்து காயங்களைக் கிளறி விடக்கூடாது என்றுதான். சேரன் மீது இன்றளவிலும் எனக்கு எந்த விமர்சனங்களும் இல்லை. ஒரு கதை பிடிக்காமல் நடிகன் மறுப்பது இயல்பு. அதை சேரனே பல இயக்குநர்களிடம் செய்திருக்கக் கூடும். அதற்காக தேர்தல் பிரச்சாரத்தில் அப்படிப் பேசினேன் என்பது சிறுபிள்ளைத்தனமான பதில்.

சொல்லுக்கு நேர்மை வேண்டும்
நாம் சொன்ன சொல்லுக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும். பொதுவெளியில் நாம் மறுக்க இயலாத சொற்களையே சொல்ல வேண்டும்.ஒரு மாபெரும் கலைஞன் தலைகுனிந்து நிற்பது வருத்தமளிக்கிறது சேரன். இவ்வாறு தாமிரா தாக்கியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications