தமிழக அரசியலைப் பார்த்து உலகமே காரி உமிழ்கிறது- விரைவில் முக்கிய அறிவிப்பு- பொங்கிய தங்கர்பச்சான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போதைய தமிழக அரசியலைப் பார்த்து உலகமே காரி உமிழ்கிறது என திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கொந்தளித்துள்ளார். அத்துடன் விரைவில் தாம் ஒரு செய்தியை அறிவிக்கப் போவதாகவும் தங்கர்பச்சான் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இயக்குநர் தங்கர்பச்சான் முன்வைத்து வரும் அரசியல் விமர்சனங்கள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் நேற்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தங்கபர்ச்சான் எழுதியுள்ளதாவது:

Director Thangar Bachan slams TN Politics

தற்போது இருக்கும் அருவருக்கத்தக்க தமிழக அரசியலைப் பார்த்து உலகமே காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில்கூட தமிழர்கள் அரசியல் விழிப்புணர்ச்சியை அடையாமல் தேர்தலை சந்தித்துக் கொண்டே போனால் எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் வாழ்நிலை எதில்போய் முடியுமோ?

இந்த உண்மை நிலையை புரிந்துக் கொண்டவர்கள் விரைவில் நான் அறிவிக்கப் போகும் செய்தியின் முக்கியத்துவத்தை உணர்வார்கள். விரைவில் அறிவிக்கிறேன்.

அன்போடு,
தங்கர் பச்சான்

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Director Thangar Bachan strongly criticized that the Tamilnadu's present dirty Politics.
Please Wait while comments are loading...