TNEA Counselling date: தமிழ்நாடு பி.இ., பி.டெக் கவுன்சிலிங் எப்போ தெரியுமா? வெளியான அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பிற்கான முதலாம் ஆண்டு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch ஆகிய பொறியியல் பட்டப்படிப்பிற்கு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 8 ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகவுள்ளன. இதனையடுத்து B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு அரசு/ அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அல்லது என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு ஏதுவாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation centre (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
இன்று முதல் 05.05.2023 தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பதிவுக் கட்டணமாக OC / BC / BCM / MBC & DNC பிரிவு விண்ணப்பதார்கள் ரூ.500 மற்றும் SC / SCA / ST பிரிவு விண்ணப்பதார்கள் ரு.250 செலுத்த வேண்டும். ஆன்லைனில் செலுத்த இயலாத மாணவர்கள் The Secretary TNEA payable at chennai என்ற பெயரில் வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
மாணவர்கள் கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும்பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மாணவர்களின் பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். அதன் பெயரில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் B.E., B.Tech (Lateral Entry and Part Time) பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு 044 - 2235 1014 / 1015 மற்றும் 1800 - 425 - 0110 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ரேண்டம் எண் ஜூன் 7ஆம் வெளியாகும் நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆந்தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் 29 வரை நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு அக்டோபர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது. கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications