பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் தாம்பரம் பெருநகராட்சியின் இணைய தளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசின் இணையதள சேவை என்பது மக்களின் தேவைகளை எளிதில் நிறைவேற்றித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்... ஆனால் பொன்விழா கண்ட தாம்பரம் பெருநகராட்சியின் இணையதளப் பக்கத்துக்கு போனால் அதிர்ச்சிதான் கிடைக்கும்...

தாம்பரம் நகராட்சிக்காக உருவாக்கப்பட்ட இணையதளம் http://www.tambaram.vitalspark.co.in அதென்ன தாம்பரம் பெருநகராட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் "vitalspark" என்பது என்ன என்கிறீர்களா? இந்த இணையதளத்தை உருவாக்கிய மென்பொருள் நிறுவனமாம்...

அரசு இணையதள முகவரியில் தனியார் நிறுவனமும் ஒட்டிக் கொண்டு விளம்பரம் தேடுவதே தவறான ஒன்று.... இதில் பெரும் கொடுமை என்னவெனில் onlineservices என்ற பகுதியில் tender என்ற ஆப்சனை கிளிக் செய்து பாருங்கள்...

அதிர்ச்சியில் உறைந்துபோய்விடுவீர்கள்..

what makes husbands; why husbands; cheat on my; i dreamed my husband; என ஏதோ ஆபாச இணையதள சாட்டிங் போல் இருக்கிறது இந்த பக்கம்... இந்த லட்சணத்தில்தான் ஒரு பெருநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இருக்கிறது...

இந்த இணையதளத்தை ஹேக் செய்து யாரோ எழுதிவிட்டார்கள் என்றெல்லாம் வியாக்யானம் கொடுப்பார்கள்.. உண்மையில் அரசாங்கத்தின் இணையதளம்...பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்வையிடுகிற பயன்படுத்துகிற இணையதளம் என்ற அக்கறையின்மையின் வெளிப்பாடுதான் இது..

இந்த விவகாரத்தில் உடனடியாக தாம்பரம் பெருநகராட்சி நடவடிக்கை எடுத்து அந்த இணையப் பக்கத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+