துப்பட்டாவுடன் கூடிய சுடிதார்.. அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு! குமரி கலெக்டர் திடீர் உத்தரவு!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது 'துப்பட்டாவுடன்' கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என ஆடை கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உணவு, ஆடை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் பல்வேறு இடங்களில் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பப்படும்போது அந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என ஆடை கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரியும் அனைத்து ஜீப்பு ஓட்டுநர்கள் அலுவலக பணி நேரத்தில் வெள்ளை சட்டை, காக்கி நீளக்கால் சட்டை அணியவும் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆண்கள் வெள்ளை சட்டை, வெள்ளை நீளக்கால் சட்டையும் பெண்கள் மெரூன் கலர் சேலை அல்லது மெரூன் கலர் 'துப்பட்டாவுடன்' கூடிய சுடிதார் அணிந்து பணி செய்ய வேண்டும் (லெக்கின்ஸ் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்) எனவும் இதனை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இதர அலுவலர்கள் அலுவலக பணி நேரத்தில் அலுவலக பணி நடைமுறையின் படி நேர்த்தியான ஆடைகள் (ஆண் பணியாளர்கள் பேன்ட் சர்ட் மற்றும் பெண் பணியாளர்கள் சேலைகள் மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார்கள்) அணிந்து அலுவலகத்திற்கு வருகை தருவதை உறுதி செய்திடவும் அலுவலக நேரத்தில் ஆண் பணியாளர்கள் ஜீன்ஸ் பேன்ட், டிராக் சூட் பேன்ட் போன்ற ஆடைகள் அணிவதையும் பெண் பணியாளர்கள் பேஷன் ஆடைகள் லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் அணிவதையும் கண்டிப்பாக தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சிபிஎம் தலைவர்களில் ஒருவரான கனகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications