மோதல் உச்சகட்டம்-மன்னார்குடி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா போஸ்டரில் தினகரன் படத்துக்கு திவாகரன் தடை!
மன்னார்குடியில் திவாகரன் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா போஸ்டர்களில் தினகரன் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மன்னார்குடியில் திவாகரன் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா போஸ்டர்களில் சசிகலா, எடப்பாடி படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதிமுக துணைப் பொதுச்செயலரும் திவாகரன் அக்கா மகனுமான தினகரனின் படம் எங்குமே இடம்பெறவில்லை. தினகரன் - திவாகரன் இடையேயான மோதலை இது அம்பலப்படுத்தி உள்ளது.
சசிகலா வசம் அதிமுக சிக்கிய போது, அதிமுகவே நாங்கள்தான்; நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என அவரது குடும்பத்தினர் கொக்கரித்தனர். ஆனால் சசிகலா சிறைக்குப் போக அவரது அக்கா மகன் தினகரனை துணைப் பொதுச்செயலராக்கினார்.
இதில் சசிகலாவின் தம்பி திவாகரன் கடும் அதிருப்தி அடைந்தார். தினகரனும் திவாகரன் பேச்சை யாரும் கேட்கக் கூடாது என கட்டளையிட்டு ஆட்சி, கட்சி இரண்டையும் கபளீகர செய்ய துடித்தார். அவரும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சிறைக்குப் போனார்.

திவாகரன் வியூகம்
இதில் திவாகரன் தரப்பு பெரும் மகிழ்ச்சியடைந்தது. திவாகரன் மகன் ஜெயானந்துக்கு அதிமுகவில் மாநிலப் பதவியை பெற்று கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தார் திவாகரன்.

எடப்பாடியுடன் கைகோர்ப்பு
அதேநேரத்தில் முதல்வரான எடப்பாடியுடன் கை கோர்த்துக் கொண்டு தினகரனை ஓரம்கட்டும் ஓரங்க நாடகங்களும் திவாகரனால் அரங்கேற்றப்பட்டன. இதனால் பகிரங்கமாக வாரிசு அரசியலை ஏற்க முடியாது என அறிவித்தார் எடப்பாடி.

மன்னார்குடியில் விழா
மேலும் மன்னார்குடியில் தினகரன் தரப்பு கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது போலீஸ். இந்நிலையில் வரும் 15-ந் தேதியன்று மன்னார்குடியில் திவாகரன் தரப்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினகரன் படத்துக்கு தடை
இது தொடர்பாக திவாகரன் மகன் ஜெயானந்த் வெளியிட்ட போஸ்டரிலும் மேடை மற்றும் பொதுக்கூட்ட இடங்களின் மாதிரிகளிலும் அதிமுக துணைப் பொதுச்செயலர் தினகரன் படம் இடம்பெறவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன.

மோதல் அம்பலம்
ஜெயானந்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் சிலர் தினகரன் படத்தையும் போடுங்க எனவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது திவாகரன் - தினகரன் இடையேயான மோதலை பகிரங்கப்படுத்தியுள்ளது என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications