நிறுத்தனும்.., திவாகரனும், கிருஷ்ணப்பிரியாவும் நிறுத்தனும்: கொந்தளிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்
தவறான தகவல்கள் சொல்வதை திவாகரனும், கிருஷ்ணப்பிரியாவும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் கேட்டுக்கொண்டு உள்ளார்.
சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல்களை சொல்லி திவாகரனும், கிருஷ்ணப்பிரியாவும் மக்களை குழப்புவதாக டி.டி.வி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டு உள்ளார்.
ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலையே இறந்துவிட்டதாக, சசிகலாவின் சகோதரர் திவாகரன் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்து இருந்தார். இது தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில், தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக திவாகரன் மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து டி.டி.வி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில், ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் முன்னுக்கு பின் முரணாக பேசி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார். டிசம்பர் 5ம் தேதி இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ள நிலையில் எதற்காக தவறான தகவல்களை அவர் தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், சசிகலா சிறையில் உள்ள நிலையில் துணைப்பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் எங்களை வழிநடத்தி வருகிறார். மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடி, இடைத்தேர்தலில் வெற்றியும் பெற்று இருக்கிறார். அவரை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், தேவை இல்லாமல் திவாகரனோ, கிருஷ்ணப்பிரியாவோ தவறான தகவல்கள் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அதில் இருந்து பின் வாங்க மாட்டோம். தனிக்கட்சி தொடங்குவதாக இருந்தால் அவருக்கு ஆதரவாக இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்களும் அவர் பின்னால் செல்லமாட்டோம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications