அதிமுகவின் எழுச்சி நாயகன் இவர்தானாம்... அதகள பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் எழுச்சி நாயகன் என்ற அடைமொழியுடன் அதகளமாக பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா குடும்பத்தின் நண்டு சிண்டு எல்லாம் அரசியலில் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக இளவரசி மகன் விவேக், திவாகரன் மகன் ஜெயானந்த் இருவரும் மல்லுக்கட்டி வருகின்றனர்.

அம்பலமான வீடியோ ரகசியம்

அம்பலமான வீடியோ ரகசியம்

இவர்களது அக்கப்போரில்தான் அம்பலமானது அப்பல்லோ வீடியோ ரகசியம். ஜெயலலிதாவும் சசிகலாவும் கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் ஏக வசனத்தில் வசைபாடும் அந்த வீடியோ விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

திவாகரன் தரப்பு தீவிரம்

திவாகரன் தரப்பு தீவிரம்

இதனிடையே அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள திவாகரன் தரப்பு படுதீவிரமாக முயற்சிக்கிறது. ஆனால் சசிகலா, தினகரன் அண்ட் கோ கடுமையாக இதை எதிர்த்து வருகிறது.

ஜெயானந்த் பிறந்தாள்

ஜெயானந்த் பிறந்தாள்

இந்நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த் நேற்று தம்முடைய பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடியிருக்கிறார். பிரம்மாண்ட கேக் வெட்டி தந்தை திவாகரனுக்கு ஊட்டிவிட்டு நண்பர்கள், அதிமுகவினருடன் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

எழுச்சி நாயகன்

எழுச்சி நாயகன்

இந்த பிறந்த நாளையொட்டி ஜெயானந்துக்கு அதிமுகவின் 'எழுச்சி நாயகன்' பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் வாழ்த்துகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala's Brother Divakaran son Jeyanandh who wants to lead ADMK party celebrated his birthday on Tuesday.
Please Wait while comments are loading...