திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தனி இயக்கம் தொடங்கினார்- விரைவில் மாநில பொறுப்பாளர்கள் அறிவிப்பு!
தினகரனைத் தொடர்ந்து திவாகரன் மகன் ஜெய் ஆனந்தும் தனி இயக்கம் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
Recommended Video

தஞ்சாவூர்: தினகரனைத் தொடர்ந்து சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலா குடும்பத்தால் அதை தக்க வைக்க முடியவில்லை. டெல்லியின் பகீரத முயற்சிகளால் சசிகலா குடும்பத்தின் முதல்வர் கனவும் தகர்ந்தது.
எம்.எல்.ஏக்களை வளைத்துப் பார்த்தும் கூட முதல்வர் எடப்பாடியார் அரசை சசிகலா குடும்பத்தால் கலைக்க முடியவில்லை. ஆர்கே நகரில் பணத்தை வாரியிறைத்து சுயேச்சையாக தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆதரவாளர்கள் அதிருப்தி
இப்போதும் கூட ஆட்சியை கலைத்துவிடுவோம் என தினகரன் கூறிவந்தாலும் அது நடக்காது என்பது அவரது ஆதரவாளர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது.

நாளை அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனிக்கட்சி தொடங்கி தமது பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார் தினகரன். இதற்கான அறிவிப்பை நாளை வெளியிடுவதாக கூறியிருக்கிறார் தினகரன்.

ஜெய் ஆனந்த் அறிவிப்பு
தினகரன் இப்படி அறிவித்த நேரத்திலேயே சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனி இயக்கம் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெய் ஆனந்த் திவாகரன் பதிவிட்டுள்ளதாவது:

பொறுப்பாளர்கள் நியமனம்
இந்த தை திருநாளை தொடர்ந்து ஓர் #முக்கிய #அறிவிப்பு: #மாவீரன் #சுபாஷ்சந்திரபோஸ் அவர்கள் பெயரில் ஒரு #மக்கள் #பணியகம் அமைக்கபட்டு என்னை சந்தித்த #இளைஞர்கள் மற்றும் சந்திக்க இருக்கும் இளைஞர்கள் ஒரு குடையின் கீழ் மக்கள் பணியாற்ற ஒரு இயக்கம் தொடங்கப்படும்..இதில் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் நமது சக்திக்கேற்ப தொண்டுகளையும் செய்ய இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களின் கருத்துகளை பரிமாறிக் கொள்ள தனியாக ஒரு சமூக தளம் உருவாக்கப்படும். அதில் மக்களின் எளிய வாழ்கையில் வரும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கு தீர்வுகாண கடும் முயற்சி எடுக்கப்படும்.

மக்கள் பணியகம்
என்னை சந்திக்க வந்த அனைத்து இளைஞர்களும் நீங்கள் இதுவரை செய்து வந்த சமூக பணிகளையும் எங்களை நாங்கள் சரியாக ஈடுபடுத்தி கொள்ள ஒரு மைய புள்ளி இல்லை. அதனால் நாங்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் இருந்து பணியாற்றவும்,உங்களுடனும் உங்கள் ஆதரவாளர்களுடனும் கடைசிவரை தொடர்பில் இருக்கவும் பயன்படும் என தெரிவித்து என்னை ஒரு மக்கள் பணியக இயக்கத்தை ஆரம்பிக்க சொன்னார்கள். இதனை கருத்தில் கொண்டே #மாவீரன்_சுபாஷ்_சந்திரபோஸ்_அவர்களின்_பெயரில்_மக்கள்_பணியகம்_தொடங்கபடுகிறது. இதற்கான அடுத்தகட்ட நகர்வை என்னுடைய முகநூலின் வாயிலாக தெரிந்து கொள்ளவும்.
"நன்றி வணக்கம்" #ஜெய்ஆனந்த்திவாகரன்"
இவ்வாறு ஜெய் ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications