'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்
என்னை சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு என பூடகமாக பதிவிட்டுள்ளார் திவாகரன் மகன் ஜெயானந்த்.
Recommended Video

சென்னை: தாம் அரசியலில் செயல்பட போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப்போவதில்லை. என்னை சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு என கொதித்திருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த்.
அதிமுகவின் துணைப் பொதுச்செயலராக தினகரனை சசிகலா நியமித்தது முதல் திவாகரன் மகன் ஜெயானந்த் தீவிர அரசியலில் குதிக்க விரும்பினார். தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.

இளவரசி மகன் விவேக், கிருஷ்ணப்பிரியா மல்லுக்கட்டிய போதும் திவாகரன் தினகரனுடன்தான் இருந்து வந்தார். தினகரன் தனிக்கட்சி தொடங்குகிறார் என்கிற நிலையில் போஸ் மக்கள் பணியகம் என்ற அமைப்பை தொடங்கினார் ஜெயானந்த்.
தினகரன் தனி கட்சி தொடங்கிய நிலையில் அதில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என ஜெயானந்த் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் பட்டும் படாமலும் தினகரனை ஆதரித்து ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வந்தார் ஜெயானந்த்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக்கில் ஜெயானந்த் ரொம்பவே அதிகமாக பொங்க தொடங்கியுள்ளார். முதலில், "மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்" என பூடகமாக ஒரு பதிவைப் போட்டிருந்தார்.
அதன் பின்னர் நேற்று என்னால் முடிந்த நல்லதை #போஸ்_மக்கள்_பணியகம் சார்பில் செய்யப் போகிறேன். "அரசியலில் செயல்பட போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப்போவதில்லை. என்னை சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு. நன்றி வணக்கம்." என மற்றொரு பதிவை போட்டார் ஜெயானந்த்.

இன்று மீண்டும், #என்_நேற்றைய_பதிவின்_நோக்கம் #நண்பர்களே_நன்கு_கவனிக்கவும்... நான் அ.ம.மு.க என்று எங்கும் குறிப்பிடவில்லை... குறிப்பிடாமலே நான் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என ஏன் ஒரு சில நிர்வாகிகள் நினைக்கிறார்கள்??? எப்போது பிரச்சனை வரும் என ஒரு சிலர் நம் கூட்டத்திலேயே காத்திருப்பாதாக ஒரு சிலர் வாயிலாக அறிந்தேன். நம் தலைமை இதனை கண்டறியும் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தொடரும் மல்லுக்கட்டு!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications