ஜெ.வும் சசியும் அப்பல்லோவில் பேசிய வீடியோ ரிலீஸ் செய்வோம்... ஓபிஎஸிக்கு திவாகரன் மகன் மிரட்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுடன் சசிகலா பேசிய வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் அதை ரிலீஸ் செய்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு விடை தேடுகிறது தமிழகம். ஜெயலலிதா தாக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தாரா என்பது தொடங்கி அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணமாக இருந்த பழச்சாறு வரைக்கும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடருகிறது.

Divakaran son reveals on Jayalalithaa's apollo video

அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன என்பது பற்றிய வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு பெரிய மருத்துவமனையில் சிசிடிவி காமிராவே இல்லை என்பது நம்ப முடியாத ஒன்றாகத்தான் மக்கள் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் அண்மையில் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதாவும் சசிகலாவும் மருத்துவமனையில் உரையாடிய வீடியோ காட்சிகள் வெளிவந்தால்... அந்த நாள் மிக விரைவில் என பதிவிட்டுள்ளார். ஜெயானந்த் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது:

கொலை பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை...
காரணம் பச்சை கவுன் உடையில் அம்மா அவர்களின் எதிரிகள்
அதை பார்க்க கூடாது என்பதே ஒரே காரணம்
இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்...
சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே
பூ உலகை ஆளுவதற்க்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம்
ஆனால் ஓ.பி.எஸ் கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிணப் பெட்டியில் வைத்து தற்போது ஓட்டு கேட்கிறார்
உண்மை வலிமையானது ஒருநாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்,தியாக
தலைவி சின்னம்மா இருவரும்
மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்...?
P.H.பாண்டியன்,
மனோஜ்பாண்டியன்,
ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்...?
அந்த நாள் மிக விரைவில்....

இவ்வாறு ஜெயானந்த் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயானந்த் பதிவிட்டுள்ளதன் அடிப்படையில் அப்பல்லோ ரகசிய வீடியோக்கள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala's brother Divakaran's son Jeyanandh Dhivakaran posted a post in his FB page on Jayalalithaa's treatement video.
Please Wait while comments are loading...