தீபாவளி ஹிட் 'கத்தி'யோ, 'பூஜை'யோ இல்ல: டாஸ்மாக் தான்!!!
சென்னை: தீபாவளி ஹிட் கத்தி, பூஜை ஆகிய படங்கள் இல்லை டாஸ்மாக் தான் என்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை அன்று விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள் ரிலீஸாகின. இதில் கத்தி படம் ரிலீஸான முதல் நாள் ரூ. 12.5 கோடியும், பூஜை ரூ.3 கோடியும் வசூல் செய்துள்ளன. ஆனால் தீபாவளி அன்று டாஸ்மாக்கின் வியாபாரம் ரூ.138 கோடி ஆகும்.
இந்நிலையில் இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளது.

யாருகிட்ட
கத்தி, பூஜை, டாஸ்மாக் வசூல் படத்தை போட்டு யாருகிட்ட என்று ஒருவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்
கத்தி, பூஜை படங்களை டாஸ்மாக் குடிமகன்கள் பார்த்திருப்பார்கள். அதனால் டாஸ்மாக்கிற்கு தான் கிரெடிட் கூடும் என ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
|
யாராலும்
யாராலும் டாஸ்மாக்கை அடித்துக் கொள்ள முடியாது என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

படங்கள்
ஆண்டுதோறும் தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்களை விட டாஸ்மாக் வசூல் தான் அமோகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
