Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி: சொந்த ஊர் செல்பவர்களுக்கு 3 நாட்களுக்கு 21,289 அரசுப்பேருந்துகள் இயக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 26, 27, 28ம் தேதிகளில் சென்னையில் இருந்து 11,125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 26, 27, 28ம் தேதிகளில் மொத்தம் 21,289 பேருந்துகள் அரசுப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அக்டோபர் மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 26, 27, 28 ஆகிய 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 11,225 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். அதோ போல, தமிழகத்தின் இதர பகுதகளில் இருந்து 10,064 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Diwali : Tamil Nadu to Operate 21,289 Special Buses

சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக , சென்னை நகரின் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

•காஞ்சிபுரம். புதுச்சேரி, கடலூர் பகுதி சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு தேர்தல் ஆணையப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சை, வழித்தடத்தில் செல்லும் சிறப்பு பேருந்துகள் தாம்பரம் சாணிட்டோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

•ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் சிறப்பு பேருந்துகள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்துகள் அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

•மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

•கோயம்பேட்டில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச்சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

•அக்டோபர் 26 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்பவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

•26ம் தேதி முதல் 28ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+