தேர்தலில் கூட்டணியா? 'மனதுக்குள் ரகசியம்' இருக்கு "தனி ரூட்" வைத்திருக்கிறேன்..: விஜயகாந்த்
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணியா? தனித்துப் போட்டியா? என்பதை மனதுக்குள் ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூட்டணிக்காக தனி ரூட் வைத்திருக்கிறேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிப்ரவரி 2-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:

வரும் லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., கூட்டணி வைப்பதா, தனியாக போட்டியிடுவதா, யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவை எடுக்க இக்கூட்டத்தில் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி எனது தலைமையில் மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட 8 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தேர்தல் குறித்து பல தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி குறித்து முடிவு எடுப்பார்கள்.
தனி ரூட்
நாடு நல்லாயிருக்க வேண்டும், மக்களை தங்க தட்டில் வைத்து தாங்க வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். தேர்தல் சமயத்தில் நம்மை தேடி வருவார்கள். கூட்டணி வியூகம் எப்படி அமைக்கிறேன் என்று பாருங்கள். அதற்காக வேறு ‘ரூட்' வைத்திருக்கிறேன்.
பரம ரகசியம்
நான் சமீபத்தில் என் மகன் நடிக்கும் ‘சகாப்தம்' படத்திற்கு பூஜை போட்டேன். ஆனால், அதுவரைக்கும் அது யாருக்காவது தெரியுமா?. அதேபோல், என் மனதில் ஒரு ரகசியம் உள்ளது. அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இன்றைக்கு ஊடகங்கள், தே.மு.தி.க. அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் கூட்டணி என்று கூறுகின்றன. நாங்கள் தனித்து நின்றால் என்ன செய்வீர்கள். அதனால், பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் கூட்டணி குறித்து பிப்ரவரி 2-ந் தேதி நடைபெறும் தேமுதிக உளுந்தூர்பேட்டை மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றார்.
தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பாஜக, காங்கிரஸ், திமுக ஆகியவை முயற்சித்து வரும் நிலையில் விஜயகாந்தின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications