40 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கட்டமாக வெளியிட்ட விஜயகாந்த்
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் 2 மணிநேரத்தில் 15 பேரை கொண்ட 2 கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். தற்போது 25 பேர் கொண்ட 3 வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 9 தினங்களே உள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. மக்கள் நலக்கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்பது பற்றி கடந்த சில தினங்களாக ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில் தேமுதிக இன்று மாலை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார். அதில் விஜயகாந்தின் 5ம் நம்பர் ராசிப்படி முதற்கட்டமாக 5 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியானது.
#தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு pic.twitter.com/69FXjIFvbm
— Oneindia Tamil (@thatsTamil) April 13, 2016
ஓமலூர் - இளங்கோவன்
புதுக்கோட்டை - ஜாகீர் ஹூசைன்
திருச்சி மேற்கு - ஜோசப் ஜெரால்டு
கன்னியாகுமரி - ஆதிலிங்கப் பெருமாள்
பத்மநாபபுரம் - ஜெகன்நாதன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பின்னர் சிறிது நேரம் கழித்து 10 பேர் கொண்ட 2-வது கண்ட வேட்பாளர் பட்டியலையும் விஜயகாந்த் வெளியிட்டார்.
#தேமுதிக -2வது வேட்பாளர் பட்டியல் வெளியானது #DMDK pic.twitter.com/vyghvFnFl8
— Oneindia Tamil (@thatsTamil) April 13, 2016
2-வது கட்ட வேட்பாளர்கள் விவரம்:
விருகம்பாக்கம்- பார்த்தசாரதி
சேலம் மேற்கு- அழகாபுரம் மோகன்ராஜ்
சீர்காழி - உமாநாத்
அம்பத்தூர்- கான்ஸ்டண்டைன்
செங்கல்பட்டு- முருகேசன்
பட்டுக்கோட்டை- செந்தில்குமார்
தஞ்சாவூர்- ஜெயபிரகாஷ்
கும்பகோணம் - பரமசிவம்
மயிலாடுதுறை- அருள்செல்வன்
திட்டக்குடி (தனி) சபா. சசிகுமார்
3-வது கட்ட வேட்பாளர்கள் விவரம்:
விருத்தாச்சலம் -முத்துகுமார்
பண்ருட்டி- சிவகொழுந்து
கும்மிடிப்பூண்டி -கீதா
திருவெறும்பூர்- செந்தில்குமார்
நத்தம்- கார்த்திகேயன்
எழும்பூர்- பிரபு
ஆலங்குளம்- ராஜேந்திரன் நாதன்
திருமங்கலம் சீனிவாசன்
வேடச்சந்தூர்- பாலு
தாம்பரம் செழியன்,
ஓட்டபிடாரம் -ஆறுமுகநயினார்
கரூர் -ரவி
மணச்சநல்லூர்- பாபு
ஆண்டிப்பட்டி -கிருஷ்ணமூர்த்தி
மதுராந்தகம் -தென்னரசு
நான்குநேரி -ஜெயபாலன்
குறிஞ்சி பாடி- பாலமுருகன்
திருவண்ணாமலை மணிகண்டன்
வில்லிவாக்கம் பாண்டியன்
கலசப்பாக்கம் -வி.எம். நேரு
போடி -வீரபத்திரன்
ராதாபுரம் - சிவானந்த பெருமாள்
கொளத்தூர்- மதிவாணன்
திருத்தணி -கிருஷ்ணமூர்த்தி
திருவொற்றியூர் -ஆறுமுகம்
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications