23ம் தேதி தேமுதிக கிறிஸ்துமஸ்.. கேக்– பிரியாணியோடு கொண்டாட்டம்
சென்னை: தேமுதிக சார்பில் டிசம்பர் 23ம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் எனப்படும் என தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பழங்காலத்தில் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று வாழ்ந்து வந்த மக்களுக்கு உன் எதிரியையும் அன்பு செய் என்று புதிய அன்பு மார்க்கத்தை உருவாக்கி, மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு செய்யவும், தங்களிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து கொண்டு, எல்லோரும் சமமாக வாழவும் வழிகாட்டியவர் இயேசு கிறிஸ்து.

அவரது மார்க்கத்தை கடைப்பிடிப்பதுதான் கிறிஸ்துவ மதம். உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகிறார்கள். எல்லா மதமும் என் மதமே என்ற பரந்த சிந்தனையோடு அனைத்து மதத்தினரின் விழாக்களையும் நாம் வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம்.
இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு 23ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் தே.மு.தி.க. சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கே என்கின்ற நமது கொள்கைப்படி இந்த கிறிஸ்துமஸ் விழாவில் நானும் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக்குகளும், பிரியாணியும் வழங்கவுள்ளேன்.
இந்நிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம் (நிறுவன தலைவர் - இந்திய சமூக நீதி இயக்கம்) பிரதம பேராயர் - இந்திய சுவிசேஷ திருச்சபைகள் பேராயர் எஸ்.ராஜாசிங் (இணை பேராயர் இ.சி.ஐ. திருச்சபைகள், சென்னை பேராயம்) ஜெ.ஜான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இவ்விழாவில் கழகத்தை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் மட்டுமல்லாமல், எல்லா மதத்தினரும் கலந்து கொண்டு, மத நல்லிணக்கத்திற்கும், வகுப்பு ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இவ்விழா அமைந்திட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில் நமது கழக நிர்வாகிகளும், தோழர்களும் தங்களால் இயன்ற அளவிற்கு இனிப்பு மற்றும் கேக்குகள் வழங்கி தாங்கள் தங்கள் பகுதிகளில் கிறிஸ்துவ மக்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை ஆண்டுதோறும் நாம் சிறப்பாக கொண்டாடி வருவதைப் போல் இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications