யாருக்கு வாக்களித்தால் என்ன நடக்கப் போகிறது... விரக்தியோடு சொல்லிவிட்டு போன விஜயகாந்த்!
ஆர்கே நகர் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் என்ன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆர்கே நகர் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் என்ன என்று பேசி விட்டு சென்றுள்ளார்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். இந்த ஆண்டுக்கான மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் 2 நாளாக டிவி பார்க்காததால் அது பற்றி தெரியவில்லை என்றார்.

வன்மையாக கண்டிக்கத்தக்கது
பள்ளி மாணவர்களின் தொடர் தற்கொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மைத்துனர் சுதீஷிடம் 7 மாணவர்களா என்று கேட்டார். அதற்கு வேலூர் அருகே 4 மாணவர்கள் இறந்தது மற்றும் வேறு 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று சுதீஷ் சொல்ல ஓஹோ என்று சொல்லிவிட்டு வன்மையாக கண்டிக்கத்தக்கது, இது அரசின் அவல நிலை என்று பதிலளித்தார்.

எதிர்ப்பவர்கள் யார்?
ஆர்.கே நகர் தொகுதியில் மாலை 5 மணி முதல் 9 மணி வரை வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது குறித்து கருத்து தெரிவித்த அவர்,
காசு கொடுப்பவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள், காசு கொடுக்க முடியவில்லை என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.

யாருக்கு ஓட்டு போட்டால் என்ன?
ஆர்கே நகர் தேர்தலில் தேமுதிக போட்டியில்லை, யாருக்கு வாக்களித்தால் என்ன. அரசு மக்கள் நலனை கவனத்தில் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.ஆட்சியின் அவல நிலையை கண்டிக்கிறேன் என்றும் விஜயகாந்த் கூறினார்.

ஒரு வாரம் பரிசோதனை
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள விஜயகாந்த்துடன், மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் சென்றுள்ளனர். சமார் ஒரு வார காலம் விஜயகாந்த் அங்கு தங்கி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வார் என்று தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications