கூட்டணி சேர்ந்த ஜெ, மோடி ஜெயிச்சுட்டாங்க.. நாங்க எப்ப ஜெயிக்கிறது: பொன்னாரிடம் புலம்பிய கேப்டன்!
சென்னை: தேமுதிக கூட்டணி வைத்த அதிமுக, பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் தேமுதிக தோல்வியையே தழுவி வருவது குறித்து பொன். ராதாகிருஷ்ணனிடம் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் புலம்பியிருக்கிறாராம்.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.
லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லவில்லை.

14 தொகுதியிலும் படுதோல்வி
போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் படுதோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது தேமுதிக.

எங்க வந்துச்சு மோடி அலை?
இது தொடர்பாக பாஜக தலைவர்களிடம் பேசிய விஜயகாந்த், நீங்கள் சொன்ன மோடி அலை வட இந்தியாவில்தான் வீசியிருக்கிறது. தமிழகத்தில் வீசவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

பொன்னாரிடம் புலம்பிய கேப்டன்
அதுவும் தமது மச்சான் சுதீஷ் தோல்வியடைந்ததை ஜீரணிக்க முடியாதவாறு பொள்ளாச்சியில் இருந்த விஜயகாந்தை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது விஜயகாந்த் வெளிப்படையாகவே புலம்பித் தள்ளிவிட்டாராம்.

எல்லாரும் ஜெயிக்கிறாங்களே..
இந்த சந்திப்பில்தான் பொன்னாரிடம், நாங்க கூட்டணி வைத்த ஜெயலலிதா ஜெயிக்கிறாங்க.. உங்க மோடி ஜெயிக்கிறாரு.. ஆனா நாங்க எப்பதான் ஜெயிப்போமோ? என்று நொந்து போய் குமுறியிருக்கிறார் கேப்டன்.

சுதீஷுக்கு ராஜ்யசபா சீட்..
அவரை சமாதானப்படுத்திய பொன்.ராதாகிருஷ்ணன், சட்டசபை தேர்தலில் வெல்வோம்..எப்படியும் சுதீஷூக்கு ஒரு ராஜ்யசபா சீட் வாங்கித் தருகிறேன் என்று ஆறுதல் கூறினாராம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications