ஓட ஓட விரட்டி தாக்கிய அதிமுகவினர்...புகாரை வாங்க போலீஸ் மறுப்பு- கும்பகோணம் தேமுதிகவினர் கொந்தளிப்பு
கும்பகோணம்: தங்களை ஓட ஓட விரட்டி தாக்கிய அதிமுகவினர் மீதான புகாரை வாங்க போலீசார் மறுத்து வருவதாக கும்பகோணம் தேமுதிகவினர் கொந்தளிக்கின்றனர்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு எதிரே மாநகராட்சி நிழற்குடை இருந்தது. அதில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை கிழித்து எறிய விஜயகாந்த் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தேமுதிகவினரும் அதை கிழித்து எறிந்தனர். இதனால் கொந்தளித்து போன அதிமுகவினர் தஞ்சாவூரில் தேமுதிக கொடி, பேனர்களை தீ வைத்து எரித்தனர்.
இதனிடையே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய தேமுதிகவினர் வாகனத்தை கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகே நூற்றுக்கணக்கான அதிமுகவினர் வழிமறித்தனர். கற்கள், சைக்கிள்கள் கொண்டு அந்த வாகனத்தை அடித்து நொறுக்கினர் அதிமுகவினர்.
வாகனத்தில் இருந்த தேமுதிகவினர் உயிருக்கு தப்பி ஓடினர். வாகனத்தில் சிக்கிக் கொண்ட ஓரிருவரையும் சரமாரியாக ஓட ஓட விரட்டி விரட்டித் தாக்கினர் அதிமுகவினர்.
பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்த இந்த தாக்குதல் குறித்து போலீசில் தேமுதிகவினர் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் புகாரை பெற மறுத்து வருவதாக தேமுதிகவினர் கொந்தளிப்புடன் குற்றம்சாட்டி வருகின்றனர்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications