ஜல்லிக்கட்டு.. ஜன.9ல் அலங்கநல்லூரில் தேமுதிக போராட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி அலங்கால்லூர் வாடிவாசல் அருகே தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி வரும் 9 ஆம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டாவது நடைபெறுமா என்று, காளையை அடக்குகின்ற தமிழக இளைஞர்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்கள், இந்த ஆண்டு நடைபெறும் என்று அறிக்கைகள் மூலமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று தெரியவில்லை என மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.எனவே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் 9ஆம் தேதி மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் காலை 10 மணியளவில், மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள், அனைவரும் கலந்துகொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications