செல், கேமரா, பூங்கொத்து, மாலை, சால்வை கொண்டுவரக் கூடாது... 9ம் தேதி தேமுதிக செயற்குழு!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிகவின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்று விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேமுதிக செயற்குழு கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் அடையாள அட்டை அவசியம் கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செல்போன், கேமிரா போன்ற எந்தவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களும் உள்ளே கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் யாரும் கேப்டன் அவர்களுக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகைதரும் நிர்வாகிகள் குறித்தும் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 09.01.2016 சனிக்கிழமை காலை 9 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள, ஜே.கே. மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

அடையாள அட்டை
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டையுடன் வருகை தந்து பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

எப்படி வரவேண்டும்
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டை அந்தந்த மாவட்ட கழக செயலாளர்களிடம் இருந்து மேற்கண்ட நிர்வாகிகள் உடனடியாக பெற்றுக் கொள்ளவேண்டும். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தங்களுடைய மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக அழைத்துக் கொண்டு கூட்டத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வருகை தந்து, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் மட்டுமே அமர வேண்டும்.

கேமராவிற்கு அனுமதியில்லை
தேமுதிக தொண்டர் அணியினரின் வழிகாட்டுதல்படி கூட்டத்திற்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். எவ்வித காரணம் கொண்டும் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன், கேமிரா போன்ற எந்தவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களும் உள்ளே கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது.

மாலை, சால்வை கூடாது
கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் யாரும் கேப்டன் அவர்களுக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்க வேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார். எனவே, எவ்வித காரணம் கொண்டும் அதற்கு அனுமதி கிடையாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் கூட்டணி
தேமுதிக கூட்டணிக்கு வருமாறு பாஜக, திமுக, மக்கள் நலக்கூட்டணி, காங்கிரஸ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஜனவரிக்கு பிறகே கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த். செயற்குழு கூட்டத்திலாவது அறிவிப்பாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications