'ஆர்.கே.நகர் தேர்தல் புறக்கணிப்பு' என விஜயகாந்த் பெயரில் டுபாக்கூர் அறிக்கை- போலீசில் தேமுதிக புகார்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக விஜயகாந்த் பெயரில் போலி அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தே.மு.தி.க. நிர்வாகிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். ஆனால் திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சியான தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக சமூக வலைதளங்களில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்ற வாசகத்திற்கு பதிலாக திராவிடமுன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை என்ற தவறுதலான வாசகமும் அதில் இடம்பெற்று இருந்தது.
ஆனால் விஜயகாந்த் அப்படி எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் அந்த அறிக்கை போலியானது என்றும் தேமுதிக விளக்கம் அளித்திருந்தது. அத்துடன் விஜயகாந்த் பெயரில் போலி அறிக்கை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. வழக்கறிஞர்கள் அணி செயலாளர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:
நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் வழக்கறிஞர் அணி செயலாளராக செயல்பட்டு வருகிறேன். எங்கள் கழகத்தின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி அதில் எங்கள் கழகத்தின் தலைவர் அறிக்கை கொடுத்ததுபோல, ஒரு அறிக்கையை மோசடியாக தயார் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இது எங்கள் கட்சியின் தலைவருக்கும், எங்கள் கட்சிக்கும் அவப்பெயரையும், களங்கத்தையும் விளைவிப்பதாகும். தவறான இந்த போலி செய்தியை வெளியிட்டுள்ள நபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜயகாந்த் பெயரில் வெளியான போலி அறிக்கையின் நகலும் போலீசிடம் அளிக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications