பிரேமலதா தலையிடாமல் இருந்தா உருப்படுவோம்... தேமுதிக நிர்வாகிகள் நெருக்கடியால் விஜயகாந்த் 'ஷாக்'
சென்னை: தேமுதிக விவகாரங்களில் பிரேமலதா தலையிடாமல் இருந்தால் கட்சி நிச்சயம் உருப்பட்டுவிடும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதால் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்ட விஜயகாந்தின் தே.மு.தி.க. 104 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட்டையே பறிகொடுத்தார்.
2006-ம் ஆண்டு தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்ட தே.மு.தி.க. 234 தொகுதிகளில் நின்று 1 தொகுதியில் மட்டுமே வென்றது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறையோ படுதோல்வியைத் தழுவி 2.40% வாக்குகளைத்தான் பெற முடிந்தது. அதன் வாக்கு விழுக்காடு 5.48% பறிபோனது.

வட தமிழகத்தில் மரண அடி
வட மாவட்டங்களில் தே.மு.தி.க.வுக்கு கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள சுமார் 100 தொகுதிகளில் 8-ல் மட்டுமே அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தை தேமுதிகவால் பிடிக்க முடிந்தது. மற்ற தொகுதிகளில் தே.மு.திக. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பா.ம.க.வை விட தே.மு.தி.க.வுக்கு வட மாவட்டங்களில் மரண அடி விழுந்தது.

திமுக கூட்டணிக்கு போயிருக்கலாம்..
இதனைத் தொடர்ந்து தே.மு.தி.க. நிர்வாகிககளை அழைத்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காததால் தான் தே.மு.தி.க.வுக்கு படுதோல்வி ஏற்பட்டது என்று நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

கட்சியினரே ஓட்டுப் போடலை
அத்துடன் தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி ஏற்படாததால் கட்சியினரே கூட ஓட்டுப் போடவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

பிரேமலதாவை ஓரம்கட்டுங்க...
மேலும் கட்சியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் தலையீட்டுக்கும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். அவரால்தான் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் போய்விட்டது; அவர்தான் மக்கள் நலக் கூட்டணி வைத்தவர்; அவரை ஒதுங்கி இருக்கச் சொல்லுங்கள் என்ற குரலும் உரத்து எதிரொலித்தது. அதேபோல் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மீதும் அடுக்கடுக்காக புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் என்ன சொல்வது எனத் தெரியாமல் விஜயகாந்த் அதிர்ச்சியில் உறைந்துபோனாராம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications