தயவு செய்து அந்த ம.ந.கூ.வில் இருந்து வெளியே வாங்க கேப்டன்: நிர்வாகிகள் கோரிக்கை
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து முதலில் வெளியேறுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்தை மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்த தேமுதிக படுதோல்வி அடைந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் இழந்தார்.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளில் பலரும் அவரிடம் வைத்த கோரிக்கை என்னவென்றால், கேப்டன் தயவு செய்து முதலில் அந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியே வாங்க என்பது தானாம்.
மக்கள் நலக் கூட்டணியுடன் தொடர்ந்து சேர்ந்திருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் சட்டசபை தேர்தல் போன்று படுமோசமான தோல்வியை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மாவட்ட செயலாளர்கள் எச்சரித்தார்களாம்.
திமுக நம்மை கூட்டணிக்கு எதிர்பார்த்த நிலையில் அதை ஊடகங்களும் செய்தி மேல் செய்தி வெளியிட்ட நேரத்தில் நீங்கள் பொசுக்கென்று மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தது மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதையே தேர்தலில் காட்டிவிட்டனர் என்றார்களாம் நிர்வாகிகள்.
மாவட்ட செயலாளர்கள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்ட விஜயகாந்த், நீங்கள் விரும்பும் மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளாராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications