தேமுதிக...பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது என்ன...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய, இன்று நடந்த தே.மு.தி.க., பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் செல்வாக்காக உள்ளன. இவர்கள் தலைமையில் அணிகள் அமைக்கப்படும். அதேநேரத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ், பாஜக ஆகியவை தலைமையில் தனி அணி அமைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் 3வது பெரிய கட்சியான தேமுதிகவை தங்களது கூட்டணியில் சேர்க்க பல்வேறு கட்சிகள் முயற்சி செய்து மேற்கொண்டுள்ளன. இதனால் தேமுதிகவிற்கு டிமான்ட் அதிகரித்துள்ளது.

வாசன் – விஜயகாந்த்

வாசன் – விஜயகாந்த்

காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், திடீரென்று விஜயகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளவே வாசன் சந்தித்துப் பேசியதாகவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வரவேண்டும் என்று விஜயகாந்தை அவர் அழைத்ததாகவும் அவர் பிடி கொடுத்துப் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. கோவையில் பேசிய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தேமுதிக காங்கிரஸ் கூட்டணியில் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக அழைப்பு

பாஜக அழைப்பு

அதேபோல பாஜகவும் மதிமுக, பாமக ஆகிய கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த அணியில் தேமுதிகவும் இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். இதனால் விஜயகாந்தை தங்கள் அணிக்கு இழுக்க அந்தக் கட்சியும் தீவிரமாக முயன்று வருகிறது. பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பொறுப் பாளர் முரளீதரராவ் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. அவர்களிடமும் அவர் பிடி கொடுத்துப் பேசவில்லை. கட்சியினருடன் பேசி முடிவு எடுப்பதாக கூறி அனுப்பி விட்டார். ஆனால் தேமுதிக தங்கள் அணிக்கு வரும் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

தி.மு.க.மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகள் தே.மு.தி.கவோடு கூட்டணிவைத்துக் கொள்ள தூது விடுத்து, வலை விரித்து காத்திருப்பதால், இன்று நடைபெறும் இக்கட்சியின் பொதுக்குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.மேலும் இந்த பொதுக் குழுவில் தே.மு.தி.க.,வின் முடிவு என்ன...? என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி..பிற தமிழக கட்சிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திமுக விருப்பம்

திமுக விருப்பம்

தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை திமுக கழட்டி விட்டபின் சிறிய கட்சிகள் மட்டுமே தற்போது இவர்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த அணியை வலுவாக்க ஒருகட்சி தேவைஅது தே.மு.தி.க.,வாக இருந்தால் நல்லது என்ற நிலையில், தி.மு.க., திட்டமிட்டு காய் நகர்த்தி தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்க எல்லா வழிகளிலும் முயற்சித்து வருகிறது.

கருணாநிதி - விஜயகாந்த்.

கருணாநிதி - விஜயகாந்த்.

விஜயகாந்த் குறித்து ஏற்கனவே கருணாநிதி நல்லவிதமாக கருத்து கூறியிருந்ததும்,தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைந்த தினத்தில் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கொண்டதும்கூட்டணிக்கு அச்சாரமிடப்பட்டதாக கூறப்பட்டது.

திமுக ஆதரவு குரல்

திமுக ஆதரவு குரல்

அதே சமயம் பலமாவட்டங்களில் உள்ள தே.மு.தி.க., மாவட்ட செயலாளர்களை தி.மு.க.தரப்பில் சந்தித்து இன்று நடைப்பெரும் பொதுக்குழுவில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்ய முயற்சிகள் நடந்ததாகவும்,அது நெருக்கடியான இந்த நேரத்தில் "பிள்ளையாரை பிடிக்கப் போய் அது குரங்காக மாறிய நிலை" ஏற்பட்டு விடக் கூடாது என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதால் அந்த முயற்சி மாற்றப்பட்டு தே.மு.தி.க., தலைமையுடனும், அதற்கு நெருக்கமான வட்டாரத்துடனும் பேசி, கூட்டணிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையிலும் தி.மு.க., இறங்கி உள்ளது.

தேமுதிக-திமுக

தேமுதிக-திமுக

கூட்டணிக்காக திமுக அதிகமான முயற்சிகளை எடுத்துள்ளது.விஜயகாந்த் கிறிஸ்தவ பேராயர்சந்திப்பு மட்டுமே வெளிப்படையாக நடந்தது. மற்ற எல்லா முயற்சிகளும் ரகசியமாக நடந்து வருகின்றன.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சார்பில், அவரது தம்பி ஒருவர் இரு கட்சிக்கும் இடையே தூதராக செயல்பட்டு வருகிறார். திமுக வுக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளர், முன்னாள் அதிகாரிகள் என ஒரு பட்டாளமே தி.மு.க.வோடு கூட்டணி வைக்க தே.மு.தி.க., தலைமையை நாடிவருகின்றனர்.

கட்சி தொடங்கியதிலிருந்து ..தற்போது..வரை ...அரசியல் ரீதியாக எந்த வருமானமும் இல்லாத நிலையிலும், கட்சி வளர்ச்சிக்காக, வட்ட செயலாளர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை பலர் இலட்சக் கணக்கில் செலவழித்துள்ளனர். இதில் அதிமுக வோடு சட்டமன்றத் தேர்தலில் வைத்த கூட்டணியின் காரணமாக எராளமான முக்கிய நிர்வாகிகள் சிலர்..டாஸ்மாக் பார், மற்றும்..சின்ன..சின்ன..ஒப்பந்தங்கள்..மூலம் பலன் பெற்று இன்றுவரை அதிமுகவோடு உறவு வைத்து தொழில் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் யாருக்கு ஆதரவாக..குரல்..எழுப்புவார்கள்..என்பதும்..தெரியவில்லை.

இன்று நடந்த பொதுக்குழு

இன்று நடந்த பொதுக்குழு

இந்த நிலையில்தான் இன்று பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டியது தேமுதிக. இதில், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்டார் விஜயகாந்த். இருப்பினும் இதன் முடிவு இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+