கீரனூரில் மாநாடு நடத்தி கூட்டணி குறித்து தொண்டர்கள் கருத்தைக் கேட்கிறார் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிகவின் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் கீரனூரில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என்பது குறித்து தொண்டர்களிடம் கருத்துக் கேட்கப் போகிறார் விஜயகாந்த்.
ஏற்கனவே கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவும் இப்படித்தான் மாநாடு போட்டு தொண்டர்களின் கருத்தைக் கேட்டார் விஜயகாந்த். பின்னர் தொண்டர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக என்று கூறி அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். ஆனால் கூட்டணி படு வேகமாக பிரிந்து பிளந்து போனது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு மாநாடு போடுகிறார் விஜயகாந்த். இதில், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து தொண்டர்களிடமே கேட்கப் போகிறார்.
இதுகுறித்து இன்று அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில் மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்யுள்ள கீரனூரில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தொண்டர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ....?!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications