மீண்டும் பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை- விரைவில் கூட்டணி அறிவிப்பு!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவும் பாமகவும் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மைத்துனர் எல்.கே. சுதீஷ் ஆகியோரை பாஜக தலைவர்கள் முரளிதரராவ், பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

பாஜக அணி
இதனிடையே பாஜக அணியில் மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்ததாக அறிவிக்கப்பட்டன.

வைகோ பங்கேற்பு இல்லை
ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படவே, மோடி பங்கேற்ற வண்டலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளவில்லை.

விஜயகாந்த் டெல்லி பயணம்
இந்நிலையில் திடீரென டெல்லி சென்ற விஜயகாந்த், பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணையப் போகிறது என்று செய்திகள் வெளியாகின.

காங்கிரஸ் நிராகரிப்பு
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், விஜயகாந்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. அத்துடன் பாஜக- தேமுதிக பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டிருந்தது.

7 தமிழர் விவகாரம்
இந்த நிலையில் 7 தமிழரை விடுதலை செய்யும் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் போயுள்ளது. இப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையுமே சம்பாதித்து வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியே வேண்டாம் என்று தேமுதிக உறுதியான முடிவெடுத்தது.

மீண்டும் பாஜக- தேமுதிக பேச்சுவார்த்தை
இதனால் மீண்டும் பாஜக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் சுதீஷுடன் கடந்த இரு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

20 தொகுதிகள் கேட்கும் தேமுதிக
ஆனால் தேமுதிக 20 தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடித்து வருகிறது. பாமகவும் 10 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கிறது. மதிமுகவோ 9 தொகுதிகளை கேட்கிறது. இதனால் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது.

விரைவில் தீர்வு
இருப்பினும் இந்த இழுபறிக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு பாஜக- தேமுதிக- பாமக- மதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications