அது வேற 'வாட்டர்'.. இது 'கேப்டன் 'வாட்டர்'!
விழுப்புரம்: உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த தேமுதிக ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு விஜயகாந்த்தின் படம், முரசு சின்னம் உள்ளிட்டவை பொறிக்கப்பட்ட வாட்டர் பாட்டில்களும், வாட்டர் பாக்கெட்களும் விநியோகிக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் நேற்று நடந்த தேமுதிக மாநாட்டையொட்டி அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
தொண்டர்கள் பெரும் ஆர்வத்துடன் கூடியிருந்தனர் - காரணம் கேப்டன் கூட்டணி பற்றி ஏதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்பில்.

சென்னை முதல் எறஞ்சி வரை
சென்னையிலிருந்து எறஞ்சி வரைக்கும் சாலையின் இரு மருங்கிலும் விஜயகாந்த் பிரேமலதாவின் படங்கள் அடங்கிய போஸ்டர்களைக் காண முடிந்தது.

ரோட்டுக்கு நடுவே கொடிகள்
நான்கு வழிச் சாலையில் ரோட்டின் நடுவிலும் இரு மருங்கிலும் கட்சிக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.

கேப்டன் விஜயகாந்த் - அண்ணி பிரேமலதா
விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவை விதம் விதமாக வாழ்த்தியும், பாடியும் ஒட்டப்பட்டிருந்த, வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள், தட்டிகள் என்று வட தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையே பரபரத்துக் காணப்பட்டது.

கேப்டன் வாட்டர் பாட்டில்
மாநாடு நடந்த பகுதியில் கட்சியினருக்காக தண்ணீர் பாட்டில், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்டவை தரப்பட்டன. வாட்டர் பாட்டில்களில் கேப்டன் வாட்டர் பாட்டில் என்று போடப்பட்டிருந்தது. அதேபோல முரசு சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது.
அது சரி..!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications