திடீர் திருப்பம் தந்த வைகோ- விஜய்காந்த் நடத்திய திரைமறைவு பேச்சுவார்த்தைகள்!
சென்னை: கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்கள் நல கூட்டணியில் இணைய தேமுதிக சம்மதித்தது.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் ம.ந.கூ தலைவர்கள் சந்தித்து பேசினர்.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று யூகங்கள் இறக்கை கெட்டி பறந்த நிலையில், கூட்டணியெல்லாம் கிடையாது என விஜயகாந்த் தடாலடியாக அறிவித்தார். இதையடுத்து அவரது கட்சி நிலைப்பாடு கேள்விக்குறியானது.
இந்நிலையில், மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைவதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டன. இது கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. வைகோ- விஜய்காந்துக்கு நெருக்கமானவர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர். நேற்று இரவே கூட்டணியில் சேர விஜய்காந்த் ஒப்புக் கொண்டார்.
முதல்வர் வேட்பாளர், 124 தொகுதிகள் என்ற விஜய்காந்த்தின் நிபந்தனைகளை ஏற்க மநகூ தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இதனால் தான் விஜய்காந்த் திமுக கூட்டணிக்கு வருவார் என கருணாநிதி கூறியபோது, எதை வைத்து கருணாநிதி இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை என்று வைகோ கூறியிருந்தார்.
இதையடுத்து ம.ந.கூ தலைவர்கள் இன்று காலை 10 மணிக்கு கோயம்பேட்டிலுள்ள விஜயகாந்த் அலுவலகம் வந்தனர். அவர்களை விஜயகாந்த் வரவேற்றார்.
ஏற்கனவே திரை மறைவில் கூட்டணி தொடர்பாக எல்லாமே பேசி முடிக்கப்பட்டு இருந்ததால் 15 நிமிடங்களில் இந்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்துவிட்டன.
இதையடுத்து விஜய்காந்த் தான் முதல்வர் வேட்பாளர், தேமுதிவுக்கு 124 தொகுதிகள் என அறிவித்து கூட்டணியை மநகூ தலைவர்கள் இறுதி செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications