Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிகவை கலைத்துவிட்டு எங்களை பிழைக்கவிடுங்கள்... விஜயகாந்துக்கு 14 மா.செ.க்கள் 'கதறல்' கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவை கலைத்துவிட்டு தங்களை பிழைக்கவிடுமாறு அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலர்கள் எழுதிய பகிரங்க கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் அக்கட்சி தோல்வியை தழுவியது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் வெற்றிவாய்ப்பை இழந்ததுடன் டெபாசிட்டையும் பறிகொடுத்தார். தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினர்.

14 மா.செ.க்கள்

14 மா.செ.க்கள்

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். மாவட்டம் வாரியாக கட்சியின் ஒவ்வொரு அணியில் இருந்தும் நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதனிடையே தற்போது 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியுள்ளனர். மாவட்ட செயலாளர்களான சென்னை மேற்கு ஏ.எம்.காமராஜ் , வேலூர் கிழக்கு எஸ்.நித்யா , கிருஷ்ணகிரி வி.சந்திரன் , தருமபுரி டாக்டர் வி.இளங்கோவன், திருப்பூர் வடக்கு என்.தினேஷ்குமார், கோவை வடக்கு ஆர்.பாண்டியன் , பெரம்பலூர்துரை காமராஜ், திருச்சி தெற்கு எஸ்.செந்தில்குமார், நாமக்கல் பி.சம்பத் குமார், திண்டுக்கல் பாலு, மதுரை மாநகர் முத்துகுமார், நெல்லை கே.ஜெயபால், கன்னியாகுமரி கிழக்கு டி.ஜெகநாதன், புதுக்கோட்டை க.ராமசாமி ஆகியோர்தான் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

உங்களை நம்பி ரசிகர்கள்..

உங்களை நம்பி ரசிகர்கள்..

இவர்கள் விஜயகாந்துக்கு அனுப்பிய பகிரங்க கடித விவரம்:

உங்களை சினிமாவில் பார்த்தும், நீங்கள் பேசிய வசனங்களையும் நம்பித்தான் ரசிகர்கள் ஆனோம். மன்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் ஆகட்டும் அல்லது தே.மு.தி.க. ஆரம்பித்த பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள் ஆகட்டும் யாருமே உங்களை சினிமாவில் ரசிக்காமல் உங்களோடு இணையவில்லை.

இருக்க முடியாது....

இருக்க முடியாது....

கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால் தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

யார் கட்டுப்பாட்டில் தேமுதிக?

யார் கட்டுப்பாட்டில் தேமுதிக?

தேர்தலுக்கு முன்பு நடந்த சிலவற்றை கூறுகிறோம் தே.மு.தி.க. பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என சொல்வதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தே.மு.தி.க. இருக்கிறது.

வேட்பாளர்கள் கட்சியை விட்டு ஓட்டம்

வேட்பாளர்கள் கட்சியை விட்டு ஓட்டம்

2006 தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டோம். அதில் 34 வேட்பாளராவது கட்சியில் தற்போது இருக்கிறார்களா? 2009-ல் 40 பேர் எம்.பி. தொகுதியில் தனித்து போட்டியிட்டோம். அதில் 4 வேட்பாளராவது தற்போது கட்சியில் இருக்கிறார்களா?

கட்சி காலி

கட்சி காலி

2005-ல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்ட செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தே.மு.தி.க. என்ற மாபெரும் கட்சியை காலியாக்கி விட்டீர்கள்.

பணமே கொடுக்கலை...

பணமே கொடுக்கலை...

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தே.மு.தி.க. மாநாடு நடத்துங்கள். நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்திற்கும் மாநாடு நடத்தியதற்கான பணம் கொடுக்கவில்லை.

உங்களுக்காக திமுகவை எதிர்த்தோம்...

உங்களுக்காக திமுகவை எதிர்த்தோம்...

உங்கள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததற்கு நஷ்ட ஈடாக 9 கோடி வாங்கினீர்கள். அண்ணியின் பிடிவாதத்தால் ஆட்சியில் இருந்த தி.மு.க.வை எதிர்த்தீர்கள். நாங்களும் காரணமே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு தி.மு.க.வை எதிர்த்தோம்.

வெண்ணெய் திரண்டு வந்த நேரத்தில்...

வெண்ணெய் திரண்டு வந்த நேரத்தில்...

உங்கள் சுயநலத்திற்காக 10 வருடமாக தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் நாங்களும் எதிர்த்தோம். 2016-ல் வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை உடைத்த கதையாக தி.மு.க.வோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள்.

ரூ500 கோடி எங்கே?

ரூ500 கோடி எங்கே?

ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப் பெரிய உதவி செய்தீர்கள். 2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? கட்சி பெயரில் டிரஸட் உள்ளது. ஆனால் கட்சிக்கும், டிரஸ்டிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.

தேமுதிக டிரெஸ்ட்

தேமுதிக டிரெஸ்ட்

தே.மு.தி.க. டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக் கொண்டு, கட்சிக்கு வருகின்ற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்த டிரஸ்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு தெரியும்.

ஒருநாளாவது கேட்டீங்களா?

ஒருநாளாவது கேட்டீங்களா?

கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறீர்களா.

பிரேமலதாவால் கட்சியை காணலை

பிரேமலதாவால் கட்சியை காணலை

தே.மு.தி.க. கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ..ஆனால் நீங்க உங்கள் குடும்பத்தினக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது.

திமுகவுடன் கூட்டணி இல்லை

திமுகவுடன் கூட்டணி இல்லை

உங்களுக்கு பல ஆண்டு காலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்பாடாமல் உங்கள் குடுபத்தினருக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீர்களே இது நியாயமா, அதன் விளைவு 10.5 சதவீதம் இருந்த வாக்கு 2.5 சதவீதமாகி போனது. தி.மு.க. நம்மால் தோற்று விட்டதல்லவா, தி.மு.க.வால் ஜெயிக்க முடிஞ்சுதா? என்று தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.

கட்சியை கலைச்சுடுங்க...

கட்சியை கலைச்சுடுங்க...

இத்தகை பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளாக தே.மு.தி.க.வில் இருக்க வேண்டுமா? நீங்களே தே.மு.தி.க. கட்சியை கலைத்து விட்டு எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+