தேமுதிகவின் 25-ந் தேதி நெல்லை பொதுக்கூட்டத்தில் திமுகவின் அழைப்புக்கு "திட்டவட்ட" பதில்?
நெல்லை: தேமுதிகவின் நெல்லை பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கான திமுகவின் அழைப்புக்கான திட்டவட்டமான பதில் தெரிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் சட்டசபை தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிடும்; விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் பேச வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து "பழம் நழுவி பாலில் விழும்" என காத்திருந்த திமுகவுக்கான தேமுதிகவின் கதவுகள் சாத்தப்பட்டுவிட்டதாக பாஜக மற்றும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே நேரத்தில் தேமுதிக தலைமையை ஏற்பதில் பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விரும்பவில்லை.

இதனாலேயே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கேப்டன் மோடிதான் என்று பாஜகவும், மக்கள் நலக் கூட்டணி என்ற விமானம் டேக் ஆப் ஆகி விட்டது; தேமுதிகவும் வரலாம்; ஆனால் தேமுதிக தலைமை ஏற்க முடியாது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோவும் கூறி வந்தனர். இந்நிலையில் புதிய திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்கான முயற்சிகளை காங்கிரஸ் முன்னெடுத்தது.
இதனடிப்படையில் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய கருணாநிதி, திமுக கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை; தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தெரிவிக்க அரசியல் களம் சூடானது.
கருணாநிதியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாஜகவும் மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரும்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என மீண்டும் கூறத் தொடங்கினர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் முக ஸ்டாலின், தேமுதிகவுக்கு புதியதாக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவில்லை; ஏற்கனவே விடுக்கப்பட்ட அழைப்பைத்தான் கருணாநிதி குறிப்பிட்டு பேசினார். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தார்.
இப்படியான பரபரப்பான சூழ்நிலையில் வரும் 25-ந்தேதி வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் தேமுதிகவின் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையில் கூறியபடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் என பேச உள்ளார்.
அனேகமாக இந்த கூட்டத்தில் திமுகவின் அழைப்புக்கு இறுதியான திட்டவட்டமான அறிவிப்பை தேமுதிக வெளியிடலாம் எனவும் கூறப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications